வழமை நிலைக்கு திரும்பியது நெடுந்தீவு – முடக்கப்பட்டதுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்கிறார் மாகாண சுகாதார பணிப்பாளர்!

Thursday, November 12th, 2020

கொரோனா தாக்கத்தின் காரணமாக சுகாதார பாதுகாப்பு நிமித்தம் கடந்த சில நாட்களாக முடக்கப்பட்டிருந்த நெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து நடவடிக்கைகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்றையதினம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டள்ளத.முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில் இன்றுமுதல் போக்குவரத்துக்கள் வழமை போல் இடம் பெறும் எ;றும் படகுப் போக்குவரத்து நேரங்களைக் கவனத்திற் கொண்டு மக்கள் தங்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார பாதுகாப்பு காரண்ங்களைக் கருத்திற் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட பிரயாணிகளே பிரயாணம் செய்ய முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நெடுந்தீவு பிரதேசம் கடந்த 14 நாட்களாக முடக்கப்பட்டு படகு சேவையும் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் குறித்த முடக்கத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இவ் முடக்கம் COVID-19 தொற்றுக் காரணமாக ஊர் மட்ட அமைப்புக்கள் எடுத்த முடிவின் பிரகாரம் முடக்கப்பட்டதாக நெடுந்தீவு பிரதேச செயலர் சத்தியசோதி தெரிவித்தார். இதனால் இப் பகுதி மக்கள் கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் கடந்த சில தினங்களாக வங்கி இயங்காமையினால் நகைகளைக் கூட அடகு வைக்க முடியாதுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக பிரதேச செயலர் மற்றும் அரச அதிபர் தெரிவிக்கையில் SLT தொலைத் தொடர்பு இணைய வழி சேவையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வங்கியை இயக்க முடியவில்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: