ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் யாழ்.மாவட்டம்!

யாழ்.மாநகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளை ட்ரோண் கமராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விமானப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று காலை யாழ்.நகரம், நல்லுாரை அண்மித்த பகுதிகள் அடங்கலாக பல இடங்களில், தீவிர கண்காணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்திருக்கின்றனர்.
குறித்த ட்ரோண் கமரா கண்காணிப்பு பிரிவுடன் உடனடியாக செயற்படகூடிய பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு இணைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரிவு ட்ரோண் கமரா மூலம் அடையாளப்படுத்தப்படும் இடத்திற்குள் அதிரடியாக நுழைந்து பயணத்தடையை மீறுவோர் மற்றும் சுகாதார நடைமுறைகளை மீறுவோரை கைது செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு சிலரது சுய நலனுக்காக உருவாக்கப்பட்ட கட்சியல்ல - அன்டனி ஜெயநாதன்
பாடசாலை செல்லும் மூன்றிலொரு பகுதி மாணவர்கள் காலை உணவு எடுப்பதில்லை - சுகாதார அமைச்சு தெரிவிப்பு
எச்.ஐ.வி தொற்று - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
|
|