தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு சிலரது சுய நலனுக்காக உருவாக்கப்பட்ட கட்சியல்ல – அன்டனி ஜெயநாதன்

Wednesday, May 11th, 2016

தமிழ் மக்களுக்கான அரசியல் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு உருவாக்கப்பட்ட கட்சியான எமது தமிழ் தேசிய கூட்டமைப்பை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனோ தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவோ அன்றி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனோ உருவாக்கவில்லை என வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவரும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான எம்.அன்டனி ஜெயநாதன் தெரிவித்துள்ளார்.

மக்களது ஆணையை பெற்றுக்கொண்டபின் அதிகார கதிரைகளில் ஏறியவுடன்  உருவாக்கப்பட்ட பாதையை மறந்தவர்களாக கூட்டமைப்பின் ஒருசாரார் நடந்துகொள்கின்றனர். இதனால் இன்று ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கழுத்தறுப்புக்களும், கருவறுப்புக்களும் தாராளமாக நடந்தேறுகின்றன. என  அவர்  பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நேற்றையதினம் வடக்கு மாகாண சபையின் 52 ஆவது கூட்டத்தொடரில் தனக்குக் கிடைக்கப்பெற்ற சிறிய நேரத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தமிழரசு கட்சியையும்  கூட்டமைப்பினரது தலைமையையும் விமர்சித்து பேசியுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

ஒரு கொள்கைக்காக ‘கூட்டமைப்பு என்று சொல்லி ஒரு கட்சியை வளர்த்துவிட்டு, அது வளர்க்கப்பட்டபின்னர் அதன் மற்றைய அங்கத்துவக் கட்சிகளை தூக்கி எறிந்துவிடுகின்றார்கள். ஆனால். வெளிநாடுகளுக்குச் செல்லும் போது மட்டும் கூட்டமைப்பு என்று சொல்லி தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றார்கள்.

எங்களுக்கும் கட்சியின் மீது விசுவாசம் உள்ளது.  அதற்காக கட்சி மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அதன் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உருவாக்கிய கட்சியாக  நினைத்துவிடக்கூடாது. நானும் கூட இதுவரை 3,000 உறுப்பினர்களை கட்சிக்கு உறுப்பினர்களாக சேர்த்துக் கொடுத்துள்ளேன்’ என தெரிவித்தார்.

Related posts: