விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் தொடர்பில் தகவல்களைப் பெற நடவடிக்கை!

Wednesday, September 26th, 2018

காட்டு விலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் தொடர்பான தகவல்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

காட்டு விலங்குகளினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்களை விவசாயிகள் எழுத்துமூலம் அறிவிக்க முடியும். 011 287 2094 என்ற அலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு சேத விபரங்களை அறிவிக்குமாறு விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் மேற்கொள்ளப்படும் பயிர்ச் செய்கையில் வருடமொன்றுக்கு 30 தொடக்கம் 35 வீதமான உற்பத்திகள், காட்டு விலங்குகளால் அழிவடைவதாகவும் அமைச்சுச் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts:


பரிசோதனை நடத்தப்பட்டவர்களில் 3 வீதமானவர்களே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்- ஜனாதிபதி ஊடகப்பிரிவு ...
தவறான கருத்துக்களைப் பரப்பி எதிர்ப்பதற்கு பதிலாக ஒரு தேசமாக முன்னேறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்...
வினாத்தாளை வெளியிட்ட நபர்களிடமிருந்து மீள் பரீட்சைக்கான செலவுவைஅறவீடு செய்ய தீர்மானம் - இலங்கை பரீட்...