தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதிமூலம் 537 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் – முன்னொருபோதும் இல்லாத வகையில் வருமானம் என தொழிற்துறையினர் தெரிவிப்பு!
Tuesday, July 26th, 2022
தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதி மூலம் கடந்த மாதம், முன்னர் எப்பொழுதும் இல்லாத வகையில் வருவாய் கிடைத்துள்ளது.
அத்துடன் இக்காலப்பகுதியில் 537 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயாக கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் முதல் அரையாண்டு காலப்பகுதியில் 2.8 பில்லியன் டொலர் வருவாய் கிடைத்துள்ளதாக தொழிற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கொவிட்-19 பரவல் காரணமாக முன்னர் பின்னடைவை சந்தித்திருந்த ஆடை உற்பத்தி தொழிற்துறை, தற்போது பழைய நிலைமைக்கு வருவதாக வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் இருந்து தைக்கப்பட்ட ஆடைகள் அமெரிக்காவுக்கே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் இரண்டாவது பெரிய சந்தையாக ஐரோப்பிய நாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கால நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
சில அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம் - இது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெள...
ஓய்வூதியம் உள்ளிட்ட அரச கொடுப்பனவுகள் இன்று – நாளையும் தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என அஞ்சல்மா ...
|
|
|


