சுதந்திர தினத்தை முன்னிட்டு 146 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி!

Thursday, February 4th, 2021

இலங்கையீன் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் குறித்த கைதிகளுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் அவர்களை விடுவிக்கவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இருந்தே கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பாலித்த சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

50 வருடங்களுக்கு மேலான காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதில் 25 ஆண்டுகள் வரை தண்டனை அனுபவித்தவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டோரும் இவ்வாறு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் சீர்திருத்தப் பள்ளிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமது தண்டனை காலத்தில் அரைவாசி பகுதியை கழித்தவர்களுக்கும் விடுதலை வழங்க திட்டமிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பாலித்த சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சுதந்திர தினத்தை முன்னிட்டு 337 இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய தரங்களிலுள்ள 8,226 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 14 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாகவும் 23 கேர்னல்கள் பிரகேடியர்களாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: