மியன்மார் தேர்தல் அதிகாரிகள் கைது மிகவும் கண்டிக்கத்தக்கது – இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிக்கை!

Friday, February 5th, 2021

சட்டம் தங்களுக்கு வழங்கிய சட்டப்பூர்வமான கடமையை முன்னெடுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மியன்மாரில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளமை துரதிர்ஷ்டவசமானது என இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமால் புஞ்சிவேவ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சி குறித்து கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு வெளிப்படுத்தியுள்ளது.

அத்துடன் மியன்மாரில் அரசியல் தலைவர்களுடன் கைது செய்யப்பட்டுள்ள தேர்தல்கள் அதிகாரிகளை உடனடியாக விடுவிக்குமாறும் அந்நாட்டு இராணுவத்தை இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அவர்களின் விடுதலைக்காக ஜனநாயகத்தின் மீது பற்று கொண்ட அனைவரும் வேண்டுகோள் விடுக்குமாறும் குறித்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: