மே 9 வன்முறை சம்பவங்கள் – அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவிப்பு!

Tuesday, September 27th, 2022

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த நாள்களில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான விசேட குழுவின் அறிக்கை தொடர்பில் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

குறித்த விசேட குழுவின் அறிக்கை கடந்த 8ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரன்னாகொட, முன்னாள் விமானப் படைத் தளபதி மார்ஷல் ஒப் எயார்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோர் அடங்கிய குழுவின் அறிக்கையின் பிரகாரம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏதும் குறைபாடுகள் இருப்பின் அது குறித்து எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவும் கலந்துகொண்டதுடன், வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அதற்கு ஆதரவானவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம்  அமுல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: