பல்லாயிரம் பக்தர்களுடன் தேரேறி பவனி வந்தார் நல்லூர் கந்தன்!

Monday, August 17th, 2020

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலய தேர் உற்சவம் இன்று காலை மிகவும் விமரிசையாக இடம்பெற்றது.

ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராக ஸ்ரீ சண்முகப்பெருமானாக எழுந்தருளிய பெருந்தேரானது இழுக்கத் தொடங்கி மீண்டும் இருப்பிடத்தை வந்தடைந்தது. அத்துடன் அடியவர்களின் வசதி கருதி இன்று (17) பிற்பகல் 2 மணிவரை சண்முகப்பெருமானை தரிசிக்க முடியும் என ஆலய தர்மகர்த்தா ஏற்பாடுகளை மேதற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் நல்லூரானின் தீர்த்தோற்சவம் நாளை 18 ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோக்ஷம் முழங்க அலங்காரக் கந்தன் நல்லூரான், தேரேறி பவனி வந்து தன்னை நாடிவந்த பக்தர்களுக்கு அருட்காட்சி கொடுத்திருந்தார்.

இதனிடையே நாட்டில் கொரோனா அச்சநிலையில் இருப்பினும் நலூரானின் பக்தர்கள், சுகாதாரநடைமுறைகளை பின்பற்றி ஆலயத்திற்கு வருகை தந்திதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பிசிஆர் பரிசோதனைக்கு 6 ஆயிரத்து 500 : அன்டிஜனுக்கு 2 ஆயிரம் - தனியார் மருத்துவமனைகளுக்கு நிர்ணய வில...
வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்துக்கான மேலதிக ஊக்குவிப்புத் தொகை வழங்கும் காலம் நீடிப்பு - இல...
வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு வீட்டுத்திட்ட முறை - பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகார...