கூட்டமைப்பினர் அமைத்த கம்பரலிய வீதியை காணவில்லை – கண்டுபிடிக்கும் முயற்சியில் உடுவில் மக்கள்!

Thursday, September 19th, 2019


ரணில் அரசுக்கு முண்டு கொடுப்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கம்பரலிய திட்டத்தினூடாக உடுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டதாக பெயர்ப் பலகை வைக்கப்பட்ட வீதியொன்று இதுவரை செப்பனிடப்படாதுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அரசாங்கத்தின் ரூபா 48 மில்லியன் பெறுமதியான நாடளாவிய ரீதியான பாரிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 990,000 /- செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட மானிப்பாய் வீதியின் முதலாவது லேன் கடந்த 30.08.2019 ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்’ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் மக்கள் மயப்படுத்தப்பட்டது என எழுதப்பட்ட பதாகை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வீதி இன்றுவரை செப்பனிடப்படவில்லை என்பதுடன்  அதற்கான எதுவித முன்னேற்பாடுகளும் நடைபெறவில்லை எனவும் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் தமது வீதிக்காக ஒதுக்கப்பட்ட ரூபா 990,000 நிதி கம்பரலிய திட்டத்தை முன்னெடுக்கும் கூட்டமைப்பின் பிரதிநிதிகளால் அல்லது அதை வழிநடத்தும் அதிகாரிகளால் களவாடப்பட்டு விட்டதா என்று மக்கள் கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே தமிழ் மக்களுக்கு உரிமையை பெற்றுத்தரும் வரை வேறெதனையும் தாம் செய்யமாட்டோம் என அடம்பிடித்துவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ரணிலின் அரசுக்கு முண்டு கொடுத்ததற்காக வழங்கிய தரகுப்பணத்தை வடக்கில் பல பகுதிகளில் கம்பரலிய என்ற போர்வையில் மக்களுக்காக வழங்கப்படும் பல திட்டங்களை முன்னெடுப்பதாக கூறி பல கோடிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏப்பமிட்டுக் கொண்டிருப்பதாகவும் மக்களிடையே அரசல் புரசலாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: