எதிர்காலத்தில் பல நெருக்கடிகள் ஏற்படலாம் – புகையிரத தொழிற்சங்க ஒன்றிணைந்த சம்மேளனம்!
Monday, March 13th, 2017
இலங்கை புகையிரத திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள புகையிரத இயந்திர சாரதிகளுக்கான வெற்றிடங்கள் காரணமாக எதிர்காலத்தில் பல நெருக்கடிகள் ஏற்படும் என புகையிரத தொழிற்சங்க ஒன்றிணைந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.
குறித்த தொழிலில் பயிற்சியற்ற சாரதிகளை ஈடுபடுத்துவது அபாயகரமான விடயம் என சம்மேளனத்தின் செயலாளர் சம்பத் ராஜித்த தெரிவித்துள்ளார்.
குறித்த வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் வர்த்தமானி மூலம் கோரப்பட்டுள்ள போதும், குறித்த நியமனங்களை ரத்து செய்வதற்கு போக்குவரத்து அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.
Related posts:
நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!
கொரோனா பாதிப்பு குறித்து போலியான தரவுகள் வெளியிடப்படவில்லை – நவம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்ப...
ஏப்ரல் 21 தாக்குதல் - சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்ட...
|
|
|


