நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை!

Tuesday, April 25th, 2017

தற்போது நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சமிந்தி சமரக்கோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்…நாட்டில் நிலவி வரும் கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலையினால், மக்கள் அதிகளவு நீரைப் பருக வேண்டும்.

கடும் வெப்பம் காரணமாக உடலின் செயற்பாட்டுக்கு பிரச்சினைகள் ஏற்படக் கூடும். குறிப்பாக தோல் நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.கடும் வெப்பம் நிலவும் போது வெளியில் சென்று வீடு திரும்பினால் முகத்தைக் கழுவிக் கொள்ள வேண்டும்.

இன்புளுன்சா, காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு ஆகிய நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.குறிப்பாக மக்கள் அதிகம் செறிந்திருக்கும் பகுதிகளில் நடமாடுவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என டொக்டர் சமிந்தி சமரக்கோன் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related posts: