வர்த்தக மாபியாக்களை தடுக்க விரைவில் புதிய வேலைத்திட்டம் – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Sunday, May 7th, 2023

நாட்டிலுள்ள வர்த்தக சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எரிவாயு, எரிபொருளின் மற்றும் டொலரின் விலைகள் குறைந்துள்ள போதும் சில வர்த்தக மாபியாக்கள் பொருட்களின் விலைகளை குறைக்கவில்லை என முறைப்பாடுகள் ஒவ்வாருநாளும் கிடைப்பதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டள்ளார்.

மேலும் பல வர்த்தகர்கள் தினமும் தமது அலுவலகத்திற்கு வருகை தந்து முறைப்பாடு செய்துள்ளதாகவும் இதனை தடுப்பதற்கு வேலைத்திட்டம் ஒன்றையும் வர்த்தககர்கள் தெரிவித்துள்ளதாகவும்

எனவே அதனை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தள்ளார்.

இந்த நடவடிக்கை மூலம் பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு நுகர்வோருக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்றும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுளதௌமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 22 மாதங்களில் 11 தடவைகள் வடபகுதிக்கு விஜயம் செய்துள்ளேன் -  ஜனாதிபதி...
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத இடங்களில் கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டால் நடைமுறைகளை மீண்டும் முத...
நியமனக் கடிதங்களால் பாதிக்கப்பட்ட சுகாதார சிற்றூழியர்கள் நிரந்தர நியாயம் பெற்றுதத்தரக்கோரி ஈழ மக்கள்...