யாழ்.மாவட்டத்திற்கு இன்னும் 25 ஆயிரம் வீடுகள் தேவை –  அரச அதிபர் வேதநாயகன்.

Saturday, September 16th, 2017

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மக்கள் விரும்பும் வீட்டுத்திட்டத்தில் இன்னும் 25 ஆயிரம் வீடுகள் வேண்டும் அரச அதபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர். சந்திப்பிலேயே மாவட்ட செயலாளர்  இது தொடர்பில் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ,யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மக்கள் விரும்பும் வீட்டுத்திட்டத்தில் இன்னும் 25000 வீடுகள்வேண்டும்.

அவ்வாறு கிடைத்தாலே மாவட்டத்தின் வீட்டுத் தேவையை பூர்த்தி செய்ய முடியும். குடாநாட்டில் மழைகாலம் ஆரம்பமாகியுள்ளது.

ஆனாலும் குடிநீர்த் தட்டுப்பாடு நீங்கவில்லை அதனால் தற்போதும் 10439 குடும்பங்களிற்கு நீர்விநியோகம் இடம்பெறுகின்றது. இதேபோன்று வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயம் சார் தெரழிலாளர்களில் 18906 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இனம் காணப்பட்டவர்களுக்கு முதல் கட்டமான வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று திங்கட்கிழமை இடம்பெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து மயிலிட்டி துறைமுகப்பகுதியின் மீனவர்களின் நன்மை கருதி திறக்கப்படவுள்ள பொன்னாலை பருத்தித்துறை வீதி தொடர்பான கலந்துரையாடலில் இடம்பெறும். இதேநேரம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கடந்த ஆண்டில் 4040 வீடுகள் கிடைத்தன. அதேபோன்று இந்த ஆண்டும் 1000 வீடுகள் கிடைக்கின்றன. இருந்தபோது இன்னமும் 25000 வீடுகள் தேவையாக உள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி 26 ஆம் திகதி வரை மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் கடைப்பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்றும் தெரிவித்தார்.

Related posts: