சனசமூக நிலையங்களுக்கு இவ்வாண்டு மானியம்!
Wednesday, November 29th, 2017
வடக்குமாகாண சபை எல்லைக்குட்பட்டு இயங்கும் சனசமூக நிலையங்களுக்கு இந்த வருடத்துக்குரிய மானியம் வழங்கப்படவுள்ளது.
இந்த மானிய நன்கொடைகளை அந்தந்த உள்ளூராட்சி சபைகள் மூலம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டது.
சனசமூக நிலையங்கள் இந்த வருடத்துக்கான பொதுக் கூட்ட அறிக்கை, வருடாந்த கணக்கறிக்கை ஆகியவற்றை உள்ளூராட்சிசபையில் கையளிக்குமாறும் உரிய அறிக்கைகளுடன் சனசமூக நிலைய பரிசோதனை அறிக்கையுடனான விண்ணப்பத்தை அந்தந்த உதவி உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்துக்கு எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
அரிசியை விற்பனை செய்ய மறுத்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை!
மத்திய வங்கியின் நாணயத்தாள் குறித்த அறிவிப்பு!
வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் அதி கூடிய வெப்பநிலை பதிவு - நிலைமையை உணர்ந்து நீர்ப் பயன்பாட்டை மேற்...
|
|
|


