சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

Wednesday, November 16th, 2022

சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில் சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர் பணியகம் ஆகியவை இணைந்தே இந்த இலக்கங்களை அறிமுகம் செய்தன.

இதற்கமைய சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு 1929 என்ற இலக்கத்துக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு 1938 என்ற இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யலாம்.

வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.15 மணி வரையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts:

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 30 பேர் கொண்ட மாணவர் குழுவினால் தாக்கப்பட்டு மாணவன் காயம்! 
பிளாஸ்டிக் பொலித்தீன் தடைக்கு மாற்று வழிமுறைகளை கண்டறிய நனோ தொழில்நுட்பம் அவசியம் - அமைச்சர் மஹிந்த ...
நோயாளிகளின் எண்ணிக்கை துரிதவேகத்தில் அதிகரித்தால் நாடு மீண்டும் முடக்கப்படலாம் – சுகாதார அதிகாரிகள் ...