ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நாடாளுமன்றில் முன்வைப்பு!
Wednesday, February 23rd, 2022
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்பதாக ஆணைக்குழுவின் அறிக்கை, அதனுடன் தொடர்புடைய சாட்சியப் பதிவுகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்கள் மற்றும் ஆவணத் தொகுப்புகள் நேற்று நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது..
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை, 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட போதிலும் சட்டச் சிக்கல்கள் காரணமாக சாட்சியப் பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் எவையும் வெளிப்படுத்தப்படவில்லை.
இதனையடுத்து, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் கண்டறியப்பட்ட விடயங்கள் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்பதற்காகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேலதிகப் பரிசீலனைக்காகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில், குறித்த ஆவணங்கள் நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


