தாதியர் பற்றாக்குறையை நீக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Friday, August 25th, 2017

வடக்கு மாகணவைத்தியசாலைகளில் நீண்ட கால மாக தாதியர் பற்றாக் குறை நிலவி வருகின்றது குறிப்பாக முல்லைத் தீவுமாவட்டத்தை பொறுத்த வரையில் தாதியர்களுக்குபெரும் பற்றாக்குறை காணப்படுகின்றது. மற்றைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது முல்லைத்தீவு மாவட்டத்திpல் இருந்து தாதிய பயிற்சிக்குசெல்வோர் மிக மிகக் குறைந்தளவேயுள்ளது.

தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணபங்கள் கோரகப்படுவதாக முல்லைத்ததீவுமாவட்ட பொது லைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் தயானந்தரூபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. இதுவரை காலம் அகில இலங்கை ரீதியில் பொதுவான ண புள்ளியின் அடிப்படையிலே  தாதியர் பயிற்ச்சிக்கு தெரிவுசெய்யப்பட்டு வந்தார்கள் அதனால் எமது மாவட்ட மாணவர்கள் இதற்கு தெரிவாக முடியாமல் இருந்தது.  ஆனால்  இம் முறை மாவட்ட அடிப்படை யில் தெரிசெய்யப்படவுள்ளார்கள் அதன் அடிப்படையில் மாவட்டத்தில் அதி கூடிய ணபுள்ளி பெற்றவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க விரும்புவர்கள் இம் மாதம் 31திகதிக்கு முன்னர் வின்னப்பிக்கவும் . இது சம்மந்தமான ஆலோசனைகளையும் விண்ணப்பப்படிவத்தையும் முல்லைத் தீவு மாவட்ட பொது வைத்திணசாலையின்  தாதிய பரிபாலகரின் அலுவலகத்தில் பெற்றுக் ;கொள்ள முடியும். இதற்கான கல்வித்தகைமைகளாக 2015 அல்லது 2016 ஆண்டு ஏதாவது ஒரு ஆண்டில் உயிரியல் பிரிவில் உயிரியல் இரசாயன வியல்.விவசாயவியல் பௌதிகவியல் ஆகிய பாடங்களில் மூன்று பாடங்களில் ஒரு அமர்வில் மூன்றுபாடங்களில் சித்தியடைந்திருத்தல் கணிதப்பிரிவில் இணைந்த கணிதம் உயர்கணிதம் இரசாயனவியல் பௌதிகவியல் ஆகியவற்றில் மூன்று பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

க.பொ.த பரீட்சையில் தமிழ்மொழிpp கணிதம் விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் திறமைசித்தியுடன் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் ஆறு பாடங்களில் சித்திp பெற்று இருத்தல் வேண்டும். 2017.08031ஆம் திகதியில் 18 வயதுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும் திருமணமாகதவலாய் இருக்க வேண்டும்;.ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வுpண்ணப்பிக்கும் மாவட்டத்தின் விண்ணப்பமுடிவுத்திகதியானது 31.08.2017ஆம் திகதிக்கு கிட்டிய மூன்று வருடங்கள் தொடர்ந்து வசித்து இருக்க வேண்டும்என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: