அரிசி இறக்குமதி செய்ய ஒருபோதும் அனுமதிக்கப்படாது – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
Tuesday, April 20th, 2021
அரசாங்கத்தின் கொள்கையின்படி அரிசி இறக்குமதி செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
அரசின் கொள்கையின்படி அரசி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படமாட்டாது. இதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டார். அவ்வாறு அரிசி இறக்குமதி செய்ய ஜனாதிபதி அனுமதித்தால் அரிசியின் விலையை எளிதில் குறைக்க முடியும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், புத்தாண்டு காலத்தில், நாடு மற்றும் சிவப்பு அரிசி 100 ரூபாய்க்கும் குறைவாக வழங்க முடிந்ததாகவும், சம்பாவின் விலையை மட்டும் கட்டுப்படுத்த முடியாது போனதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சட்டம் யாவருக்கும் சமமாக இருக்க வேண்டும் - ஜனாதிபதி !
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் பாரியளவில் வீழ்ச்சி!
சிறைச்சாலைக்கு புதிய ஆணையாளரை நியமிக்க அமைச்சரவை அனுமதி!
|
|
|
வடக்கில் கூட்டுறவு சங்கங்களின் நிறுவன செயற்பாடுகள் திருப்தியாக இல்லை – வடக்கின் ஆளுநர் குற்றச்சாட்டு...
மருந்துப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நிதியமைச்சின் முழுமையான அனுமதியை...
மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாளை யாழ்ப்பாணம் வ...


