வடக்கு கிழக்கில் பிராந்திய ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!
Thursday, June 2nd, 2022
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு வசதியாக குறித்த இரண்டு மாகாணங்களிலும் பிராந்திய ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சருக்கும் நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தின் விஞ்ஞானிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது, குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இலங்கையில் காணப்படுகின்ற வளங்களைப் பயன்படுத்தி கடற்றொழில்சார் செயற்பாடுகளை விஸ்தரிப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வற்கு சவாலாக இருக்கின்ற விடயங்கள் தொடர்பாக நாரா நிறுவனத்தின் விஞ்ஞானிகளினால் எடுத்துரைக்கப்பட்டது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடடிற்கும் நாட்டு மக்களுக்கும் ஆரோக்கியமான கடலுணவுகளையும் பொருளாதார நன்மைகளையும் உருவாக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட முன்மொழிவுகளை வழங்குமாறும், அதுதொடர்பாக துறைசார்ந்தவர்களுன் கலந்துரையாடி சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.
000
Related posts:
|
|
|


