கடந்த கால வரலாற்று தவறை மக்கள் இம்முறை மாற்றி எழுதுவர் – பருத்தித்துறையைில் டக்ளஸ் எம்.பி!

Thursday, February 1st, 2018

கடற்றொழில் துறையை நவீனப்படுத்தி அதனூடாக துறைசார்ந்தவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான எமது செயற்றிட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு மக்கள் ஆதரவுப்பலத்தை தரவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை கொட்டடி பகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

எனக்கொரு நீண்டகால ஆசை இருக்கின்றது.  அது என்னவென்றால் வடமராட்சிக் கரையோர பகுதியிலுள்ள பிரதான வீதியை “காபற்” இடப்பட்டு ஒரு சிறந்த தரமான வீதியாக ஆக்கவேண்டும் என்பதுடன் கடற்கரை பகுதியை அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கும் அதே வேளை உல்லாசமையமாக அந்தப் பகுதிகளை நிர்மாணித்து ஒரு சொர்க்காபுரியாக அமையப்பெற வேண்டும் என்பதேயாகும். இது எனது நீண்டநாள் கனவும் கூட..

ஆனால் துரதிஸ்டவசமாக அதனை செயற்படுத்த முடியாத நிலை எனக்கு ஏற்பட்டது. அதற்கு காரணம் மக்கள் மீதோ அன்றி மக்களது நலத்திட்டங்களிலோ அக்கறை ஆற்றல் இல்லாதவர்களிடம் அரசியல் பலத்தை மக்கள் கொடுத்ததேயோகும்.

ஆனால் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலை மக்கள் உரிய முறையில் பயன்படுத்தி அதனூடாக எமக்கு வெற்றியை உறுதி செய்யும் பட்சத்தில் நிச்சயம் அந்த மாற்றத்தை நாம் கொண்டுவருவோம்.

முன்னைய காலங்களில் எமது கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு செல்வதாயின் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையில் இருந்துவந்தனர். குறிப்பாக தொழிலுக்கான அனுமதி நடைமுறை (பாஸ்) மற்றும் நேரவரையறை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் இருந்தபோதெல்லாம் அந்த தடைகளை நிறுத்தி எமது தெழிலாளர்களின் சுதந்திரமான தொழிலுக்கு வழிவகை செய்திருந்தோம்.

இருந்தும் இன்றும் கூட மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு செல்வதற்கு அனுமதி பெறவேண்டிய அவலம் காணப்படுகின்றது. இதற்கு காரணமானவர்கள் யார் என்பதை மக்கள் இன்று நன்கறிந்துள்ளனர். எனவே கடந்த காலங்களில் மக்கள் செய்த அந்த வரலாற்று தவறை இனிமேலும் விடக்ககூடாது என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:

கிடைத்த சந்தர்ப்பங்கள்அனைத்தையும் மக்களது விடியலுக்கானதாக உருவாக்கி வெற்றிகண்டிருக்கின்றோம் - முல்லை...
கைவேலி ஸ்ரீமுறுகண்டிப் பிள்ளையார் ஆலயத்தின் கருவறைக்கான அடிக்கல்லை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ...
அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு – டக்ளஸ்...