நிரந்தர நியமனம் தான் கிடைக்காது போனாலும் எமது சேவைக்கு ஏற்ற ஊதியத்தையாவது அதிகரித்துத் தாருங்கள்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தீவக முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!

Thursday, March 5th, 2020

தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது சேவைக்கான ஊதியத்தை  தமது குடும்ப வருமானத்துக்கேற்ற பொருளாதாரத்தை ஈட்டும் வகையில் உயர்த்தி  தருவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு இன்றையதினம் (5) வருகைதந்த குறித்த முன்பள்ளி ஆசிரியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடியபோது மேலும் கூறுகையில் –

பல இடையூறுகளுக்கு மத்தியில் சிறார்களுக்கான ஆரம்பக் கல்வியை முன்னெடுத்துவரும் தமக்கு இதுவரை நிரந்தர நியமனங்கள் வழங்கப்படாத நிலையே காணப்படுகின்றது. அவ்வாறான ஒரு நிலையில் மாதாந்தம் 3000 ரூபா  முதல் 6000 ரூபா வரையான  ஊதியமே கிடைக்கின்றது. இந்த நிலையில் எனது நிரந்தர நியமனத்தை பெற்றுத்தந்து எமக்கு ஊதியத்தையும் உயர்த்தித் தருமாறு பலரிடம் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தும் அது ஈடேறவில்லை.

இதனால் நாம் பல அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொண்டு வருகின்றோம். அதுமட்டுமல்லாது நிரந்தர நியமனம் கிடையாத நிலையில் பலர் 40 வயதை எட்டியுள்ளானர்.  அந்தவகையில் நிரந்தர நியமனம் தான் எமக்கு கிடைக்காது போனாலும் எமது சேவைக்கு ஏற்ற ஊதியத்தையாவது அதிகரித்துத் தாருங்கள் என கோரிக்கை விடுத்தனர்.

குறித்த முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகள் மற்றும் நியாயமான தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டபின் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் –

உங்களது பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானதுதான். அதனால் நான் எமது கடந்த  மகிந்தராஜபக்ச ஆட்சிக்காலத்தில் உங்களது நிரந்தர வேலைவாய்ப்பாகவும் உங்களது வாழ்வாதாரத்துக்கான நிலையான ஒரு நிரந்தர  நீடித்த வருமானத்தையும் பெற்றுத்தர நான் முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.

ஆனாலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த முயற்சி தடைப்பட்டுப்போனது.  அத்துடன் நான் மத்தியில் இருந்தாலும் உங்களது நியமனத்தில் மாகாண சபையின் அனுமதியும் வேண்டும்.

எமது மக்களுக்கு நிரந்தரமான எதிர்காலம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறையுடன்  நாம் உழைத்து வருகின்றோம். இந்த எமது பயணத்தில் மக்களது அதிகரித்த பங்களிப்பும் இருக்க வேண்டும்.

மக்கள் தமது எதிர்காலம் தொடர்பில் விழிப்படைய வேண்டும். அவ்வாறான மாற்றம் ஏற்பட்டு மக்கள் எமது கரங்களை பலப்படுத்தும் போது நாம் முன்னெடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் பூரணமாக நிறைவேற்றித்தர முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

குறைந்தது அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கப்போவது ஜனாதிபதி கோடபயதான். அந்தவகையில் எமது மக்கள் தமது வாக்கையின் எதிர்காலம் கருதியதாக தெளிவான நிலைப்பாட்டில் இருந்து உங்கள் சமுதாயத்திற்காக உங்களது எதிர்கால சந்ததிக்காக  நீங்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தீவக பிரதேச ஒருங்கிணைப்பாளருமான கா. வேலும்மயிலும் குகேந்திரன் ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன், வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி மற்றும் கட்சியின் குறித்த பிரதேசங்களின் நிர்வாக உதவி நிர்வாக செயலாளர்கள் உடனிருந்தனர்.

Related posts:


வாழ்வின் எழுச்சி திட்டத்தின் மூலம் வறுமையை போக்கவும், வேலைவாய்ப்பை வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும் -...
பேலியகொட மீன் சந்தையின் புனரமைப்புப் பணிகளை உடன் ஆரம்பிக்கவும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவு !
வடமாராட்சி - தென்மாராட்சி பிரதேச உள்ளூராட்சி மன்றங்களில் ஈ.பி.டி.பியை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப...