மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள்  அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்க அனுமதிக்க முடியாது! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, December 26th, 2016
சிறப்பு அபிவிருத்திகள் தொடர்பான சட்டவரைபு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதற்கு சில மாகாண சபைகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், ஒரு சில மாகாண சபைகள் பொருத்திருந்து தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.
எமது மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைத் தீர்வு தொடர்பில் ஓர் ஆரம்பமாக நாங்கள் ஆரம்பந்தொட்டு கூறிவருகின்றவாறு, 13வது அரசிலமைப்புச் சீர்திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தவதில் ஆரம்பித்து, படிப்படியான அதிகாரப் பகிர்ந்தளிப்பை நோக்கிச் செல்லும் செயற்திட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு கூடிய அதிகாரங்களை வேண்டி நிற்கின்றோம். எனவே, தற்போது மாகாண சபைகளுக்கு இருக்கின்ற அதிகாரங்களை எந்த வகையிலும் குறைத்தவிடாது, மேலும் அதிகாரங்களைப் பகிர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், ஏற்கனவே, கடந்த ஆட்சியின்போது, தற்போதுள்ள மாகாண சபை முறைமையின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றபோது, அதற்கெதிராகவும், மாகாண சபை முறைமைக்கு ஆதரவாகவும் என்னால் நாடாளுமன்றத்தில் 50க்கும் அதிகமான ஆளுங்கட்சி உறுப்பினர்களது கையொப்பங்களைப் பெற முடிந்தது. இதனூடாக, அன்றைய அரசுக்கிருந்த பெரும்பான்மை ஆதரவை இல்லாதொழித்து,  இந்த மாகாண சபை முறைமையைக் காப்பாற்றக்கூடியதாக இருந்தது.
எனவே, மாகாண சபை முறைமையின் அதிகாரங்களைக் குறைப்பதற்கோ, பறிப்பதற்கோ அனுமதிக்க இயலாது எனத் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் இது தொடர்பில் ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்து வருவதால், எமது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் இந்த வரைபு அமையப்பெறும் பட்சத்தில் அதற்குப் பூரண ஆதரவு வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
DD3 copy

Related posts:

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஊர்காவற்றுறை மக்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோ...
வடக்கின் கல்விசார் உட்கட்டமைப்பில் அமைச்சர் டக்ளஸின் பங்களிப்பு அலாதியானது - அமைச்சர் தினேஸ் பெருமித...
மக்களுக்கு நன்மைகள் கிடைப்பதை தடை செய்யும் வகையில் அதிகாரிகளின் செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது - ...

கிளிநொச்சி அறிவியல் நகரில் பொறியியல் பீடம் அமைந்தது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பெருமுயற்சி...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு யாழ்ப்பாண மக்கள் பிரமாண்ட வரவேற்பு: வீதியெங்கும் விழாக்கோலம்!
அவலத்தில் வாழும் மக்களின் துயரம் துடைக்கும் ஆண்டாக புதுவருடம் பிறக்கட்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் ...