அரசியல் அதிகாரங்கள் எம்மிடம் இருந்தபோது மக்களுக்காக நாம் சாதித்துக் காட்டியவை ஏராளம் – ஊடக சந்திப்பில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, December 27th, 2018

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களது தலைமையிலான அரசில் முன்வைக்கப்பட்ட அற்புதமான தீர்வுத்திட்டத்தில் எமது கட்சி சார்பாக நாமும் 19 பக்கங்கள் அடங்கிய எமது கருத்து நிலைப்பாடுகளை முன்வைத்திருந்தோம்.

அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் எமது மக்களுக்கு அதனூடாக ஒரு நல்ல தீர்வுக்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். துரதிஷ்டவசமாக அது சரியான வகையில் பயன்படுத்தப்படவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தின்போது அற்புதமானதொரு தீர்வுத்திட்டம் நடைமுறைப்படுத்துவதாக இருந்தது. ஆனால் அது சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பின்னரான காலகட்டங்களில் கூட அத்திட்டம் சரியான வகையில் முன்னெடுக்கப்படவில்லை.

அக்காலப்பகுதியில் எமது மக்களை பட்டினிச் சாவிலிருந்து மீட்டிருந்தது மட்டுமல்லாது கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் எமது மக்களுக்காக பெற்று கொடுத்திருந்த அதேவேளை திட்டமிடப்பட்ட வகையில் வடக்கில் நடத்தப்படவிருந்த குடிசன மதிப்பீட்டையும் மேற்கொள்ளாது தடுத்திருந்தோம்.

அது மட்டுமன்றி காணாமல் போனோர் பாதுகாவலர் சங்கத்தை நிறுவி அதனூடாகவும் காணாமல் போனோர் தொடர்பாக அறிந்து கொள்ளவும் எதிர்காலங்களிலாவது இவ்வாறு நடைபெறாது பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டங்களையும் யுத்த சூழலில்  நாம் மேற்கொண்டிருந்தோம் என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

48991448_344564103041051_6239655284206206976_n

Related posts:

திக்கம் வடிசாலையை வருமானம் ஈட்டும் தொழிற்சாலையாக மாற்ற வேண்டும் – அதிகாரிகளுடனான கூட்டத்தில் அமைச்சர...
தமிழக மக்கள் மகிழ்வுடன் வாழும் நீதி ஆட்சி மலர வேண்டும் - தமிழக முதலமைச்சருக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த...
பனை சார் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்களும் பிரச்சினைகளும் துறைசார் அமைச்சர் ரமேஸ் பத்திரனவுடன் இணை...