யாழ் நகரின் இடர்பாடுகளுக்கு உரிய தீர்வுகாணும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 26th, 2018

யாழ் மாநகரத்தை மேலும் அழகுபடுத்தி முன்னேற்றங்காணச்செய்யும் அதேவேளை பழக்கடை வியாபாரிகள் நலன்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் நகரப்பகுதி பழக்கடை வியாபாரிகளால் நடத்தப்பட்ட வருடாந்தப் பொங்கல்  நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையைில்

யாழ் நகரப்பகுதியில்  உள்ள பழக்கடைகளை சகல வசதிகளுடன் கூடியதான வகையில் அமைத்து வியாபாரிகளுக்கு வழங்கும் எண்ணம் எமது நிலைப்பாடாக உள்ளது. அதுமாத்திரமன்றி நகரத்தில் தரித்துநிற்கும் முச்சக்கரவண்டிகளுக்கென விஷேட தரிப்பிடம் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்தவுள்ளோம்.

அத்துடன் இந்நகரத்தில் உள்ள இட நெருக்கடிகளுக்கு உரிய வகையில் தீர்வுகாணும் வகையில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் செயற்படுத்தவும் நாம் எண்ணியுள்ளோம். எமது எண்ணங்களுக்கும் விரப்பங்களுக்கும் யாழ் நகரப் பழக்கடை வியாபாரிகள் மட்டுமல்லாது அனைத்து வர்த்தகப் பெருமக்களும் பூரண ஆதரவை நல்கும் பொருட்டு நிச்சயம் நாம் அந்த மாற்றத்தைக் கொண்டுவருவோம்.

நகரத்தின் சுத்தம் சுகாதாரத்தை பேணுவது மாத்திரமன்றி நகரத்தின் அழகை மேலும் மெருகூட்டுவதற்கு அனைத்துத் தரப்பினரும் பூரண ஆதரவினை எமக்கு நல்கவேண்டும்.

அத்துடன் பழக்கடை வியாபாரிகளுக்கு இலகு கடன் திட்டங்களுக்கூடாக கடன்களை வழங்கி அதனூடாக அவர்களது வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்கும் வளப்படுத்துவதற்கும் இனி வருங்காலங்களை வர்த்தகர்களுக்கு மட்டுமல்லாது நகரத்திற்கு பல்வேறு தேவைகளின் நிமித்தம் யாழ் நகருக்கு வரும் மக்களுக்குமாக எமது அர்ப்பணிப்புகளுடனான உழைப்பை எதிர்வருங் காலங்களிலும் நிச்சயம் வழங்குவோம் என்றும் டக்ளஸ் தேவானந்தா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

நிறைவாக அங்கு வருகைதந்த மக்களுக்கு டக்ளஸ் தேவானந்தா பொங்கல் பிரசாதங்களை வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


நாடு முழுதும் பரவிவரும் தொற்று நோய்கள் தடுப்பதற்கு நடவடிக்கை என்ன? - டக்ளஸ் தேவானந்தா சபையில் கேள்வி...
முல்லைத்தீவு செம்மலைப் பகுதி மக்களின் வாழ்வாதார நிலைமையினை அவதானத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து உதவ ...
யாழ் மாவட்ட கூட்டுறவுச் சபை ஊழியர்கள் தமது எதிர்காலம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆராய்...