அரசியல் நோக்கங்களுக்காக அதிகாரிகள் பழிவாங்கபப்படுவதை அனுமதிக்க முடியாது – வேலணையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, January 28th, 2021

அரசியல் நோக்கங்களுக்காக அதிகாரிகள் பழிவாங்கபப்படுவதை அனுமதிக்க முடியாது என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட அமைச்சருமான டக்ளஸ்  தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வேலணை துறையூர் பிரதேச மக்களுடனான சந்திப்பின் போது பிரதேச செயலரின் இடமாற்றத்தினை தடுத்து நிறுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் – பிரதேச செயலரது இடமாற்றம் குறித்து துறைசார் அமைச்சரது கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும்  தெரிவித்துள்ளார்.

அத்துடன் வட மாகாணத்தில் இவ்வாறான இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுமாயின் அது தொடர்பில் தமக்கு தெரியப்படுத்தி தனது ஆலோசனையையும் பெற்றுக்கொள் வேண்டும் என்று தான் துறைசார் அமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதனிடையே வேலணைப் பிரதேசத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா அவர்களை சந்தித்த பிரதேச மக்கள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான கோரிக்ககளை கையளித்துள்ளனர்.

இதன்போது துறையூர் ஐயனார் முன்பள்ளிக்கான கட்டடம் இன்மை தொடர்பில் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்டதுடன் குறித்த கட்டடத்தை கட்சியின் நிதிப் பங்களிப்புடன் மேற்கொண்டு தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தமிழ் மக்களது தீரா பிரச்சினைக்கு நிச்சயம் நான் நிரந்தர தீர்வு பெற்றுத்தருவேன் - டக்ளஸ் எம்.பி. நம்பி...
சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி எதிர்காலத்தை வெற்றி கொள்ளுங்கள் - ஒலுமடுவில் டக்ளஸ் எம்பி தெரிவிப்...
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் முன்னாய்வுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...