வடக்கின் வீடமைப்பு திட்டம் இம்மாதம்முதல் ஆரம்பம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, November 4th, 2018

வடபகுதி மக்களுக்கான வீடமைப்பு திட்டம் இம்மாதம்முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கின் அபிவிருத்தி, இந்து மத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த அரசில் வடக்கில் வீடமைப்புத் திட்டம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகளால் மக்கள் பாதிப்படைவது தொடர்பில் நீங்கள் இப்போது வடக்கு அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் என்ன முன்னெடுப்புகளை மேற்கொள்ளவுள்ளீர்கள் என பி.பி.சியின் செய்தி சேவைின் செய்தியாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவரடகளிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்

மேலும் அவர் கூறுகையில் கடந்த ஆட்சியில் வடக்கில் நடைமுறைப்படுத்தப்படருவிருந்த  வீடமைப்புத் திட்டத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளால் அதில் தொடர்ந்து இழுபறி நீடித்துவந்தது. ஆனால் தற்போது அது எனது அமைச்சின் கீழ் வந்துள்ளமையால் இம்மாதம் (நவம்பர் மாதம்) முதல் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் இம்மாதம் 15 ஆயிரம் வீடுகளுக்கு அஸ்திவாரம் போடப்போடப்படவுள்ளது என்றும் அத்திட்டத்தை முழுமையாக விரைவில் கட்டி முடிப்போம் என்றும் அவர் தெரிவித்திருந்தாமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

"சொன்னதைச் செய்தவர்கள் செய்வதையே சொல்பவர்கள்" எனும் மகுடத்துடன் ஈ.பி.டி.பியின் தேர்தல் விஞ...
அடைமழையால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட நிலைமைகள் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் த...
மக்கள் அவலங்களுக்குள் தத்தளிக்கையில் வெளிநாட்டில் குடித்தனம் நடத்தியவர் இங்கே ஊழையிடுகின்றார் - நாடா...

குடிநீரைப் பெற்றுத் தருவதற்குக் கூட ஆளுமையற்றவர்கள் கூட்டமைப்பினர் - பூநகரி பள்ளிக்குடா மக்கள் டக்ளஸ...
குடாநாட்டை அச்சுறுத்தும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
பதற்றம் தேவையில்லை : ஆனாலும் விழிப்புடன் இருங்கள் – கொரோனா தடுப்பு விசேட ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்...