முல்லை மாவட்டத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவ் விஜயத்தை நிறைவுசெய்து இன்று வடக்கின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
கடந்த நான்கு நாள்களாக கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அங்கு பல்வேறுபட்ட பிரதேசங்களுக்கும் சென்று மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்துகொண்டதுடன் அவற்றுக்கான தீர்வுகள் காண்பது தொடர்பாகவும் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்திற்கான தனது விஜயத்தை நிறைவுசெய்துள்ள செயலாளர் நாயகம் இன்று வடக்கு மாகாகணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இருநாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி குறித்த தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களிலும் தனது வீணைச் சின்னத்தில் தனித்து போட்டியிடுகின்றது.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பங்கெடுக்கும் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்புக்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|