மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் – யாழ். மாவட்டசமாச சம்மேளனப் பிரதிநிதிகள் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Thursday, July 6th, 2017

மயிலிட்டித்துறைமுகம் விடுவிக்கப்பட்டிருந்தாலும் அதனை தொழில் நடவடிக்கைகளுக் கேற்றவகையில் அபிவிருத்திசெய்ய வேண்டியது அவசியமானது என்பதுடன் அதற்கேற்ப செயற்றிட்டங்களை முன்னெடுக்க ஆவனசெய்து தருமாறு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசசம்மேளனப் பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கையினை முன்வைத்தனர்.

கொழும்பிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் மேற்படிசந்திப்பு இன்றையதினம்;(05) இடம்பெற்றிருந்த நிலையிலேயே பிரதிநிதிகள் இக்கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.

இதன்போதுநாட்டில் நிலவியயுத்தசூழல் காரணமாகநாட்டின் இரண்டாவது மீன்படித் துறைமுகமாகவிளங்கும் மயிலிட்டித்துறைமுகம் கடந்த 27 வருடகாலமாகபடைத்தரப்பினரின் உயர்பாதுகாப்புவலயத்திற்குள் இருந்தகாரணத்தினால் கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்குமுற்றாகதடைசெய்யப்பட்டிருந்தது.இன்றுமயிலிட்டித்துறைமுகம் விடுவிக்கப்பட்டிருந்தாலும் கூட அதனைஎமதுகடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கேற்றவகையில் அபிவிருத்திசெய்யவேண்டியதுஅவசியமானதுஎன்பதுடன் அதற்கேற்பசெயற்றிட்டங்களைமுன்னெடுக்கஆவனசெய்யவேண்டும்.

ஒருகாலகட்டத்தில் வடக்கின் பொருளாதாரத்திற்கானவருமானத்தைஈட்டிக் கொடுப்பதில் மயிலிட்டித்துறைமுகத்தின் பங்குமுக்கியம் பெற்றிருந்தது.அந்தவகையில் மயிலிட்டித்துறைமுகத்தைமீளவும் எமக்குகிடைக்கப்பெறச் செய்வதில் தாங்கள் வகித்தவகிபாகத்தைநாம் ஒருபோதும் மறக்கமாட்டோம் என்பதுடன்,கடற்றொழிhளர்கள் சார்பில் எமதுநன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் சுட்டிக்காட்டினர்.

மயிலிட்டித்துறைமுகத்தின் அபிவிருத்திமட்டுமல்லாதுஅப்பகுதியில் விடுவிக்கப்படாதுள்ளமக்களின் பூர்வீககுடியிருப்புப் பகுதிகளைஉள்ளடக்கிய ஏனைய பகுதிகளையும் விடுவிப்பதற்கானநடவடிக்கைகளையும் முன்கொண்டுசெல்லப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியபிரதிநிதிகள்,அதற்கானமுழுமையானமுயற்சிகளையும் முன்னெடுக்குமாறும் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டுக்கொண்டனர்.அத்துடன் கடற்றொழிலாளர்களின் பாரம்பரியதொழில்முறையானகம்பு (தடி) பயன்பாட்டுக்குப் பதிலாக இரும்புப் பைப்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இதன் காரணமாகதொழில்துறைக்குப் பெரும் பாதகத்தைஏற்படுத்தும் நிலைகாணப்படுவதாகவும்,கம்பு (தடி) பயன்பாட்டைஉபயோகிக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

இதனிடையேவடபகுதிக் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்டதொழில் முறைகளான இழுவைமடிமற்றும் சுருக்குவலைதொழில் நடவடிக்கைகளால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடியபாதிப்புகள், இடர்பாடுகள் கடற்றொழிலாளர்களுக்குமட்டுமல்லாது கடல் வளங்கள் அழிவடையும் பேராபத்துதொடர்பாகவும் எதிர்காலத்தில் கடல் உணவுகிடைக்கப் பெறாதநிலையில் எதிர்காலசந்ததியினர் ஆரோக்கியமற்றபோசாக்கற்றசமூகமாகஉருவாகும் நிலைதொடர்பாகவும் இதன்போது கவனஞசெலுத்தப்பட்டு விரிவாககலந்துரையாடப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மதவாத ரீதியில் மக்களை வழிநடத்த யாரேனும் முயற்சித்தால் நாடு அழிவுகளை சந்திக்க நேரிடும் – டக்ளஸ் எம்....
ஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது – நாடாளுமன்றில் டக்ளஸ்...
கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் ட...