அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Wednesday, December 16th, 2020

அரசியல் கைதிகள்  விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுடன் முன்னாள் போராளிகளுக்கு சிறந்த வாழ்வாதாரம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் இன்று(16.12.2020) வவுனியா வாடி வீட்டில் பொதுமக்கள் மற்றும் கட்சிச் செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊாடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

ஒரு காலத்தில் அரசியல் கைதியாக இருந்தவன் என்ற வகையில், அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டள்ள அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னர்  கைது செய்யப்பட்டவர்களின் செயற்பாடுகளை தான் ஏற்றுக் கொள்ளாத போதிலும், தவறான தலைமையின் வழிநடத்தல்களினாலேயே குறித்த செயல்கள் நடந்தது என்ற அடிப்படையில் தன்னை கொலை செய்ய முயற்சித்த, உதவிய குற்றச்சாட்டின்  அடிப்படையில் சிறையில் இருப்பவர்கள் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி அனைத்து விடுதலை அமைப்புக்களை சேர்ந்த  முன்’னாள் போராளிகளினதும் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போதிய ஆசனங்களை மக்கள் வழங்காமையினால் குறித்த விடயங்களில் உடனடியாக பேச முடியாது இருப்பதாக ஆதங்கத்தினை வெளியிட்ட  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பொருத்தமான சூழலில்  தேவையான தரப்புக்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: