மீன்பிடித்துறைமுகத்திற்கு சொந்தமான துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Monday, October 16th, 2023

கொழும்பு மோதரையில் அமைந்துள்ள மீன்பிடித்துறைமுகத்திற்கு சொந்தமான துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது தொடர்பாக உரிய தரப்புகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

இக்கலந்துரையாடலின்போது கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த, அமைச்சின் செயலாளர்கள், மீன்பிடித்துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர், முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் மற்றும் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதனிடையே இலங்கையில் இருந்து மீன் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் சங்கப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்தனர்.

இச்சந்திப்பின்போது சமகாலத்தில் ஏற்றுமதிக்கான மீன்கள் கிடைப்பதில் காணப்படும் குறைபாடுகள் அவற்றை ஈடு செய்வதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சருடன் கலந்துரையாடினர்.

கலந்துரையாடலின்போது இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

இனங்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய நல்லிணக்க செயற்பாடுகள் அமைய வேண்டும்! - ...
நெளுக்குளம் பிள்ளையார் கோயில் வீதிக்கான அடிக்கல் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜோன்சன் பெனான்டோ ஆகி...
இரணைதீவு கடலட்டைப் பண்ணையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்தித்து கலந்த...

கிழக்கு தொல்லியல் செயலணிக்கு பொருத்தமானவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை - விவேகம் அற்ற வீரம் ஏற்படுத்...
கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கெடுத்த...
அபிவிருத்தியை இலக்காக கொண்ட வேலைத் திட்டங்களின் போது அடையாளப்படுத்தப்பட்ட விவகாரங்களுக்கு அமைச்சர் ட...