வடக்கில் வெள்ளத்தினால் அழிவடைந்த உப உணவு பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படாதது ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, February 8th, 2019

அண்மையில் வடக்கில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தில் நெற் பயிர்ச் செய்கையல்லாத அழிவடைந்துள்ள ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற கேள்வி நேரத்தின்போது விவசாயம், கிராமிய பொருளாதாரம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் பி. ஹரிசன் அவர்களிடமே இவ்வாறு வலியுறுத்தியுள்ளர்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அண்மையில் வடக்கு மாகணத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 50 ஆயிரம் ஏக்கர் வரையிலான பயிர்ச் செய்கைகள் அழிவடைந்துள்ளன.  ஆயிரக் கணக்கில் கால்நடைகள் அழிந்துள்ளன. பல விவசாய குளங்கள் சேதமுற்றுள்ளன. விவசாய மற்றும் கடற்றொழில் சார்ந்த வீதிகள் சேதமடைந்துள்ளன. கல்லாறு, சுண்டிக்குளம், தட்டுவன்கொட்டி போன்ற கடலோரப் பகுதிகளில் கடற்றொழில் உபகரணங்களும், படகுகளும் சேதமடைந்துள்ளன எனத் தெரிய வருகின்றன.

நெற்செய்கை அழிவடைந்திருந்தால், ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா வீதம் காப்புறுதி சபையால் வழங்கப்படுமென கௌரவ அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளதாக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டன. இந்த நிலையில் சுமார் 1,500 ஏக்கர் கடலை, சுமார் 10 ஹெக்டயர் சோளம் போன்ற பயிர்ச் செய்கைகளும் ஏனைய உப உணவுப் பயிர்ச் செய்கைகளும் அழிவடைந்துள்ளன. இம் மக்கள் கடந்த கால வறட்சி காரணமாக மிகுந்த தொழில் பாதிப்புகளுக்கு உட்பட்ட நிலையிலேயே விவசாய செய்கையினை மீண்டும் ஆரம்பித்திருந்த நிலையில், மேற்படி வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது என்பதால், இவர்களுக்கான இழப்பீட்டுத் தொகைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இந்நிலையில் பின்வரும் கேள்விகளை முன்வைக்கின்றேன்.

அழிவடைந்துள்ள நெற்செய்கைக்கான கொடுப்பனவு உரிய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, ஏக்கருக்கு 40 ஆயரம் ரூபா வீதம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா?

இல்லை எனில், எப்போது வழங்கப்படும்.?

நெற் பயிர்ச் செய்கையல்லாத அழிவடைந்துள்ள ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கு எவ்வகையிலான இழப்பீடுகள், எப்போது வழங்கப்படும்?

சேதமடைந்துள்ள விவசாய மற்றும் கடற்றொழில் சார்ந்த வீதிகள் மற்றும் விவசாய குளங்கள் என்பன எப்போது மீளமைக்கப்படும்?

சேதமடைந்துள்ள கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் படகுகளுக்கான இழப்பீடுகள் எப்போது வழங்கப்படும்?

அழிவடைந்துள்ள கால்நடைகளுக்கான இழப்பீடுகள் என்ன? அது எப்போது வழங்கப்படும்.?

குறித்த கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் பி. ஹரிசன் அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

Related posts:

மக்களின் தேவைகளை அறிந்து சேவை செய்பவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் - கண்டாவளையில் டக்ளஸ் எம்.பி. தெரி...
இந்தியாவில் சிக்கியிருந்தவர்களுடன் கட்டுநாயக்காவை வந்தடைந்தது முதலாவது விமானம் - நாடு திரும்பியவர்கள...
அமரர் சிவஞானசோதியின் இழப்பு எனக்கு மட்டுமல்லாது இலங்கைத் தீவுக்கும் பேரிழப்பு – அஞ்சலி உரையில் அமைச்...

அமெரிக்க தூதரகத்தின் அரசியல் செயலாளர் கெலி,  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு.
யுத்தத்தின் எச்சங்களாக வாழும் எமது வாழ்வியலுக்கு விளக்கேற்றித் தாருங்கள் - டக்ளஸ் தேவானந்தாவிடம் முழ...
நடைமுறை சாத்தியமான வழிமுறைகளை இதயசுத்தியுடன் செயற்படுத்த முன்வாருங்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...