முன்னாள் போராளிகளை ஏற்க எமது சமூகம் தயாராக வேண்டும்! டக்ளஸ் தேவானந்தா

Friday, April 1st, 2016

முன்னாள் போராளிகளை ஏற்று அவர்களையும் எமது சமுதாயத்துடன் இணைத்து நடாத்த எமது சமூகம் முன்வருவது அவசியம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், முன்னாள் போராளிகள் பலரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். வாழ்வாதார பிரச்சினைகளுடன் சமூகமய பிரச்சினைகளும் இவர்களது வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளன.

இவர்களில் பெண் போராளிகளின் நிலை மிகவும் வேதனையைத் தரத்தக்கதாக உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் திருமணம் முடிக்காத நிலையில் உள்ளனர். ஏற்கனவே இயக்கங்களில் இருந்தவர்கள் என்ற காரணம் காட்டப்பட்டு, இவர்களுக்கான திருமணங்கள் மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இயக்க செயற்பாட்டுக் கால கட்டங்களில் திருமணம் முடித்தவர்கள் கூட இன்று சமூக வேறுபாடுகளைக் காரணம்காட்டி பிரிந்து வாழும் நிலையும் காணப்படுகிறது.

இப் போராளிகள் பல்வேறு காரணங்களால் போராட்ட வாழ்க்கைக்கு தள்ளப்பட்டவர்கள். இதனை எமது சமூகம் கருத்தில் கொள்ள வேண்டும். இவர்களும் எமது சமூகத்தின் அங்கத்தவர்களே. அந்த வகையில் எமது சமூகம் இவர்களை ஏற்று, இவர்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க தயாராக வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இந்த உன்னத செயற்பாடு தொடர்பில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 

 

 

 

Related posts:

திட்டங்களுக்கு சிங்களப் பெயர்கள் சிறுபான்மை மக்களுக்கு பயனில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா த...
நீர்வேளாண்மை மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பு. - அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!
குடாரப்பு தரையிறக்கத்தின் போது கால்களை இழந்த முன்னாள் கடற்புலி போராளிக்கு அமைச்சர் டக்ளஸின் முயற்சிய...