பொருளாதார வளம்மிகு சுற்றுலாத் தளமாக இரணைதீவு உருவாக்கப்படும் – அமைச்சர் தேவா நம்பிக்கை!

Tuesday, January 19th, 2021

பொருளாதார வளம் கொழிக்கும் சுற்றுலாத் தளமாக இரணை தீவு பிரதேசத்தினை உருவாக்குவதே எதிர்பார்ப்பு என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இரணைதீவு பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்படவுள்ள நவீ்ன தொழில்நுட்ப முறையிலான கடலட்டை பண்ணையிக்கான பூர்வாங்க வேலைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிபடுத்துகையிலேயே இதனை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையிலேயே முதன்முதலாக நவீன தொழில்நுட்ப பதனிடுதல் பொறிமுறையை உள்ளடக்கியதாக சுமார் 4 கோடி ரூபாய் தனியார் முதலீட்டில் இரணைதீவு பிரதேசத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள கடலடடைப் பண்ணை செயற்பாட்டில், கடற்றொழில் அமைச்சின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற நக்டா எனப்படுகின்ற தேசிய நீர்வாழ் உயிரினங்கள் அபிவிருத்தி அதிகார சபை, தனியார் முதலீட்டாளர்கள், இரணைதீவு கடலட்டை வளர்ப்போர் சங்கம் ஆகிய 3 தரப்புக்கள் சம்மந்தப்பட்டுள்ளன.

குறித்த மூன்று தரப்பினருக்குமான பொறுப்புக்கள் வரையறுக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

குறித்த கடலட்டை பண்ணை, இரணைதீவு பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 83 கடற்றொழிலாளர்களுக்கு தலா 01 ஏக்கர் வீதம் பகிர்தளிக்கப்பட்டுள்ள நிலையில், கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்வது உட்பட்ட உற்பத்தி நடவடிக்கைகளுக்காக சுமார் 20 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடல் பிரதேசத்தினை சம்மந்தப்பட்டவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான சட்ட ரீதியான வேலைகள் நடைபெற்று வருகின்றன.  ஆக, அனைத்து வேலைகளும் இறுதிக் கட்டத்தினை அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நான் நம்புகின்றேன் இன்னும் ஒரிரு மாதங்களுக்குள் குறித்த திட்டம் ஆரம்ப்பிக்கப்படும்.

இங்கு கடலட்டை மாத்திரமன்றி மீன் வளர்ப்பினையும் மேலதிக வருமானமாக மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தில் இரணைதீவு பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலளார்களுக்கு முழுமையாக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களை சந்தித்த மக்களுக்கு சிறப்பான பொருளாதார வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த திட்டம்  எந்தவிதமான சறுக்கல்களும் இல்லாமல் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.

இதுவும் மெதுவான நகர்விற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எவ்வாறெனினும், இரணைதீவு மக்களின் வாழ்வில் இந்தத் திட்டம் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.

தனியார் மற்றும் அரசாங்கத்தின் பங்களிப்புடன் இரணைதீவு பிரதேசத்தினை வளங்கொழிக்கும் பிரதேசமாக மாற்றுவதுடன் சிறந்த சுற்றுலாத் தளமாகவும் மாற்ற வேண்டும் என்ற எனது எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும்” என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts:

தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவித்திருக்க வேண்டும் - ஜனாத...
எதிர்காலங்களை வளப்படுத்தும் எமது செயற்பாடுகளுக்கு மக்கள் முழுமையான அரசியல் பலத்தைத்தரவேண்டும் - அம்ப...
மதங்களுக்கிடையில் மட்டுமல்ல இனங்களுக்கிடையில் நல்லுறவும் அவசியம் -டக்ளஸ் எம்.பி. விலியுறுத்து!

கசப்பான சம்பவங்களுக்கு மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை மட்டும் பரிகாரமாகாது – டக்ளஸ் எம்.பி சுட்ட...
எமது மக்களின் பிரச்சினைகளை முதலில் நாம் தேசியமயப்படுத்த வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
மண்டைதீவில் அமையவுள்ள சுற்றுலா மையத்திற்கான அமைவிடத்தை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!