காலத்திற்கேற்ப தேவைகளை இனங்கண்டு, அவற்றை இயன்றளவு பூர்த்தி செய்யும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமைந்திருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, November 21st, 2020

கிராமியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்ற தேசிய வேலைத் திட்டத்தை எமது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களும், பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களும் பெரும் முனைப்புடன் தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், காலத்திற்கேற்ப தேவைகைள இனங்கண்டு, அவற்றை இயன்றளவு பூர்த்தி செய்கின்ற வகையிலேயே இந்த வரவு – செலவுத் திட்டம் அமைந்திருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, இந்த நாட்டுக்கு உரிய வகையிலான விவசாய, பெருந்தோட்ட, கடற்றொழில் துறைகள் மற்றும் இவற்றையும் எமது நாட்டின் ஏனைய வளங்களையும் கொண்ட உற்பத்தித்துறைகள், சுய கைத்தொழிற்துறைகளின் வளர்ச்சியே தற்போதைய நாட்டின் தேவையாக உள்ளது.

அதேநேரம், ஏனைய உற்பத்தித் துறைகள் சார்ந்தும் அவதானம் செலுத்த வேண்டியுள்ளதுடன், எமது மக்களின் நலன் கருதிய அனைத்து சேவைகளையும் சமகாலத்தில் தொடர வேண்டிய தேவையும் உள்ளது.

குறிப்பாக, கொவிட் 19 கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் மற்றும் அதனால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டியிருக்கின்ற சம காலத்தில் எமது சுகாதாரத் துறையின் வலுத் தன்மை தொடர்பிலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. இத்தகைய அனைத்து விடயங்களையும் இந்த வரவு – செலவுத் திட்டம் அவதானத்தில் கொண்டிருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் எமக்கு கிடைக்குமானால் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்குவோம்...
நடமாடும் சேவையின்போது பணம் செலுத்தாது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித மக்களுக்கு அதை இலவசமாக வழங்...
21 ஆவது திருத்தச்சட்டத்துக்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி - டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 5 அமைச்சர்களை ...