இலங்கையில் அரசியலைப்போல் விளையாட்டுத் துறைக்கும் ஒரு பொதுக்கொள்கை இல்லை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, May 22nd, 2019

இந்த நாட்டின் அனைத்துத் துறைகளுக்கும் ஒரு தேசிய கொள்கை இல்லாததுபோல் – ஏன் இந்த நாட்டுக்கே ஒரு தேசிய கொள்கை இல்லாதது போல், விளையாட்டுத் துறைக்கென்றும் ஒரு தேசிய கொள்கை இல்லை என்றே தெரிய வருகின்றது நாடாளுமன்றில் நடைபெற்ற 2013ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க விளையாட்டுத்துறையில் ஊக்குவிப்பு பதார்த்த பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

2012ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் விளையாட்டுத்துறை அமைச்சு செய்ய வேண்டியவை என இனங்காணப்பட்ட வேலைத் திட்டப் பட்டியலே அடங்கியிருகின்றதே அன்றி அது விளையாட்டுத் துறை சார்ந்த தேசிய கொள்கை அல்ல என்பதையும் விளையாட்டுத்துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேற்படி பட்டியலில் இருந்து பெரும்பாலான விடயங்கள் இணைக்கப்பட்டதாக ஒரு பிரகடன்ம் 2019ஆம் ஆண்டு கொழும்பு பிரகடனம் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருப்பினும், விளையாட்டுத்துறையில் முன்னேற்றம் கண்டுள்ள நாடுகள் பின்பற்றி வருகின்ற திட்டங்களின் நிழல் கூட இதில் இல்லை என்றே விளையாட்டுத்துறை சார்ந்த நிபணர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய நிலையிலேயே இந்த நாட்டின் விளையாட்டுத் துறை இருந்து வருகின்றது.

குறிப்பாக, விளையாட்டுத் துறை அமைச்சுக்கும் ஏனைய விளையாட்டுத் துறை சார்ந்த நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பாடல்கள் வினைத்திறன் அற்ற நிலையிலேயே இருந்த வருவதாகத் தெரிய வருகின்றது.

இன்னுமொரு முக்கிய விடயம் தொடர்பில் கூற வேண்டியிருக்கின்றது. அதாவது பாடசாலையை விட்டு, தேசிய விளையாட்டுத் துறையானது விலகி இருக்கக் கூடாது. விளையாட்டுத்துறையானது பாடசாலைகளுடன் மிக, மிக நெருக்கமாக பின்னிப் பிணைந்ததாக இருக்க வேண்டும்.

விளையாட்டுத்துறை அமைச்சானது கல்வி அமைச்சுடன் இணைந்தும் செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில், தேசிய விளையாட்டுத் துறையிலிருந்து பாடசாலை விளையாட்டுத்துறை என்பது வெகு தூரம் ஒதுங்கியிருப்பதாகவே அமைந்து விடுகின்றது.

இந்த நிலை இந்த நாட்டில் தொடருமானால், இந்த நாட்டின் விளையாட்டுத் துறையை ஒருபோதும் அபிவிருத்தி செய்ய முடியாத நிலையே தொடரும் என்பதில் ஐயமில்லை என்றே கூற வேண்டும்.

Related posts:

மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுப்பவர்கள் யார் என்பதை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் - திருமலையி...
நெடுந்தீவுக்கு முழுநேர குடிநீரை பெற்றுக்கொடுத்ததுபோல மெலிஞ்சிமுனைக்கும் குடிநீரை பெற்றுத்தருவோம் - ட...
தனியார் தொழில் முயற்சியாளர்களினால் பள்ளிக்குடாவில் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை பதனிடும் நிலையத்தை சம்...

வடக்கில் பாடசாலைகள் புனரமைப்பிற்கு இந்திய உதவி வரவேற்கத்தக்கது! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவான...
தெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும் - அமைச...
பேருவளையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தினக் கொண்டாட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...