வடக்கில் பாடசாலைகள் புனரமைப்பிற்கு இந்திய உதவி வரவேற்கத்தக்கது! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Sunday, March 13th, 2016

வடக்கில் 27 பாடசாலைகளைப் புனரமைப்பதற்கும் கிழக்கில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு சத்திர சிகிச்சைக்கூட கருவிகளை வழங்குவதற்கும் இந்திய அரசு முன்வந்திருப்பது பாராட்டத்தக்க விடயமாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கடந்த காலத்தில் எனது கோரிக்கைக்கு அமைவாக இந்திய அரசு பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தது.  அந்த வகையில் வடக்கிற்கான இரயில் பாதை மீள் நிர்மாணம், யாழ் கலாசார மண்டபம், பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் எனது அமைச்சின் கீழ் கைத்தொழிற் கிராமங்கள் அமைத்தல், பனை ஆராய்ச்சி நிறுவன மீள் நிர்மாணம், வட கடல் நிறுவனத்திற்கான புதிய இயந்திரத் தொகுதிகள் என பல்வேறு உதவிகளை இந்திய அரசு செய்து கொடுத்துள்ளது.

அதே நேரம் எனது திடீர் கோரிக்கைக்கு அமைவாக 50 ஆயிரம் வீடுகளை எமது மக்களுக்காக நிர்மாணித்துத் தந்துள்ளது. இந்நிலையில், இப்போது பாடசாலைகள் புனரமைப்பு மற்றும் வைத்திய சாலைக்கான கருவிகள் என இந்தியா மேற்கொண்டு வரும் உதவிகள் எமது மக்களுக்கு இன்றியமையாத பாரிய உதவிகளாகும். அந்த வகையில் எமது மக்கள் சார்பாக இந்திய அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

சட்டவிரோத மண் விநியோகத்தை ஊக்குவிப்பவர்களே துன்னாலை இளைஞனின் மரணத்திற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.
ஜுலைக்கு வெள்ளை அடிக்காது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு வெள்ளை அடியுங்கள் – நாடாளுமன்றில் டக்ள...
கொவிட் 19 காரணமாக தாமதமாகிய நந்திக்கடல் புனரமைப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நட...