சட்டவிரோத அட்டை பிடிப்புகளால் சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்

Friday, July 7th, 2017

பொதுவாக வடக்கு மாகாண கடற் பரப்பில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வெளி மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு மிக அதிகளவில் – அதாவது ஒருவருக்கு பல அனுமதிகள் என்ற வகையில் வழங்கப்பட்டு வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.  இச் செயற்பாடானது எமது கடற்றொழிலாளர்களைப் பாதிக்கின்ற இன்னுமொரு காரணியாக அமைந்துள்ளது. எனவே, இவ்விடயம் குறித்தும் அமைச்சர் அவர்கள் அவதானங்களைச் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதே நேரம், வடபகுதியில் சுமார் 200 வரையிலான கடற்றொழிலாளர்களுக்கு அட்டை பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்;, இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடல் தூரத்தைவிட குறைந்தளவு தூரத்தில் இவர்கள் மின் வெளிச்சம் பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுவதாலும், அப்பகுதிகளை கலக்குவதால், மீனினங்கள் கலைந்து செல்வதாலும், கரைப் பகுதிகளை பயண வழிகளாகக் கொள்வதால், சிறு தொழிலாளர்களது வலைகளை ஊடறுத்துச் செல்வதாலும் சிறு தொழிலாளர்கள் தொழில் ரீதியிலான பாதிப்புகளுக்கு உட்பட்டு வருவதாகவும், மேற்படி அட்டை பிடிப்போருக்கு யாழ்ப்பாணக் கடல் பகுதிகளில் இரவில் தொழில் செய்ய அனுமதியில்லாத நிலை இருந்தும், அவர்கள் இரவு வேளைகளிலும் தொழிலில் ஈடுபடுவதாகவும், இவர்களது தொழில் செயற்பாடுகளால் மீனினங்களுக்கான உணவு வளங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர.;

எனவே, இவ்விடயம் குறித்தும் உடனடி அவதானங்களைச் செலுத்தி, மேற்படி தடை செய்யப்பட்ட தொழில் முறைமைகளை நிறுத்துவதற்கும், வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கேற்ப அவர்கள் தொழில் செய்வதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

அந்த வகையில், யாழ்ப்பாணம் வடமராட்சி, முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற பகுதிகளில் கடற்றொழில் ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அத்துமீறல்கள், தடை செய்யப்பட்ட முறைமைகளினாலான தொழிற் செயற்பாடுகள் போன்றவற்றையும் நிறுத்துவதற்கு எதிர்காலத்தில் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன், எமது பகுதிகளில் பெறுமதிசேர் கடலுணவு உற்பத்திக்கான ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அதனை முழுமையாக ஊக்குவிக்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன் என்றும் சுட்டிக்காட்டினார்.

Related posts: