எதிர்காலத்தை வெற்றி கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பங்களுக்கு பங்காளிகளாக இருப்பது அவசியம் – பலாலியில் டக்ளஸ் எம்பி தெரிவிப்பு.

Sunday, August 25th, 2019

தமிழ் மக்களின் எதிர்காலத்தை மாற்றியமைக்க மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வரவுள்ளது. இதை தெளிவான சிந்தனையூடாக மக்கள் இம்முறையேனும் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அந்த மாற்றத்தை இம்முறை மக்கள் தவறவிடமாட்டர்கள் என நம்புவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பலாலி வடக்கு அன்ரனிபுரம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

ஆயுதப் போராட்டம் உருவாகுவதற்கு முன்னர் எமது மக்கள் சுயமாக சிந்தித்து செயற்பட்டார்கள். பின்னாளில் எமது மக்களின் கருத்து சுத்ந்திரத்தை அழிவு யுத்தம் மௌனிக்கச் செய்துவிட்டது. ஆனால் இவ்வாறு தொடர்ந்தும் இருந்துவிட முடியாது.
இனிவரும் காலத்தையாவது நாம் வெற்றிகொள்ள சுயமாக சிந்தித்து கிடைக்கின்ற சந்தர்ப்பங்களின்போது அதன் பங்காளிகளாக இருக்கவேண்டியது காலத்தின் கட்டயமாக உள்ளது.

கடந்த கால சரி பிழைகளை ஆய்ந்து நாம் விட்ட சந்தர்ப்பங்களை பாடமாக கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த பிரதேசமானது ஒரு மீழ் குடியேற்ற பகுதியாகும்.
இப்பகுதியை விட்டு எவரும் விரும்பி இடம்பெயர்ந்து செல்லவில்லை.

ஆனாலும் மாற்றங்கள் பல நடைபெற்றுள்ளன. திரும்பி நீங்கள் இப்பகுதிக்கு வந்தபோது பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.ஆனாலும் இன்னும் பல மாற்றங்கள் தேவையாக உள்ளது.

இடப்பெயர்வு எமது மக்களின் வாழ்வியல் நிலையை இரு வகையாக மாற்றிவிட்டு சென்றுள்ளது.
புலம்பெயர்ந்து சென்ற எமது மக்கள் தமது வாழ்க்கை முறையை ஓரளவு வெற்றி கண்டுள்ளனர்.

ஆனால் உள்ளூரில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் இன்னமும் தமது வாழ்வியல் முறையில் மாற்றம் காணவில்லை. இதை மாற்றியமைக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

மீண்டும் தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த சந்தர்ப்பம் தற்போது கிடைக்கவுள்ளது. கடந்த காலங்கள் போல தமது எதிர்காலத்தை கருங்கல்லில் விதைத்துவிடாது சரியானதாக உருவாக்கிக்கொள்ளுவார்கள் என நம்புகின்றேன்.

போராட்டமும் அதனால் மக்கள் பட்ட வலிகளையும் நான் நன்கு அறிந்தவன். அதை நானும் நேரில் அனுபவித்தவன். இதனால் எனக்கு சரி பிழைகளை விமர்சனம் செய்யும் அருகதை இருக்கின்றது.

இலகுவாக செலும் வழிமுறை பல இருக்க முடியாத ஒன்றை காட்டி முரண்பட்டுக் கொண்டிருப்பதே இன்றுவரை நாம் அவலங்களை சந்திக்க காரணமாக இருக்கின்றது.

எம்மால் எமது மக்களின் துயர துன்பங்களை துடைக்க முடியும். அதற்கான பொறிமுறையும் நம்பிககையும் எமக்கு உண்டு.

புலம்பெயர் தேச மக்களைப்போல எமது மக்களும் வாழ வேண்டும் என்பதே எனது அவாவாக உள்ளது. இத்தகைய சூழ் நிலையை மாற்றியமைக்க என்னால் முடியும். ஆனால் அதற்கான அரசியல் பலத்தை மக்கள் எனக்கு தரவேண்டும்.

இம்முறை வாக்கு பலத்தை எமது மக்கள் சுயமாக சிந்தித்து வழங்க வேண்டும்.
கடந்தகால அனுபவங்களின் பாடங்களையும் அதன் வெளிப்பாடுகளையும் கொண்டே நான் எதிர்காலம் குறித்து கூறிவருகின்றேன்.
அதனால் தான் நான் கூறும் ஒவ்வொன்றும் நிதர்சனமாகிவருகின்றது.

அரசுகளோ சர்வதேசமோ எமக்கு எதனையும் பெற்றுத்தரப்போவதில்லை.
எமக்கானதை நாமே பெற்றுக்கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும்.

அதை பணப்பெட்டி அரசியலாலோ சவப்பெட்டி அரசியலோ பெற்றுக்கொள்ளமுடியாது.
மக்களின் நியாயமான கோரிக்கைகள் எதுவோ அதை என்னால் பெற்றுத்தர முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
அதற்கான கொள்கையும் வேலைத்திட்டமும் எம்மிடம் உண்டு.
அதை உருவாக்கிக்கொள்ள மக்கள் விளிப்படைய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் - சபாநாயகரால் அல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்...
வலி வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த மற்றுமொரு தொகுதி காணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வ...
கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச மிதிவெடி விளிப்புனர்வு விசேட நிகழ்வு - அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க...

தென்னிலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு...
நம்பிக்கையோடு அணுகுகின்றவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவேன் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
யாழ் புகையிரத அத்தியட்சராக பதவியேற்றுள்ள சுரேந்திரன், சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை...