சுதேச மருத்துவச் சட்டமூலம் அமைச்சர் டக்ளசின் ஆட்சேபனையால் கைவிடப்பட்டது. ~~~~

Tuesday, October 18th, 2022

சுதேச மருத்துவ திருத்த சட்டமூலங்களுக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் கீழ் செயற்பட்டு வருகின்ற சுதேச மருத்துவ கற்கைநெறிகள் தொடர்ந்து தனித்துவமாக செயற்படுவதே ஆரோக்கியமானது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அதாவது, சுதேச மருத்தவம் தொடர்பான சட்ட ஒழுங்குகளில் கால மாற்றத்திற்கு தேவையான திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் 8 திருத்தச் சட்ட மூலங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அவற்றுள் ஒரு திருத்தச் சட்டமூலம்,

கொழும்பு பல்கைலைக் கழகத்தில் சுதேச மருத்து கற்கை நெறிகளுக்கான பிரதான நிறுவனம் ஒன்றினை ஸ்தாபித்து, அதன் கீழ் யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக் கழகங்களின் கீழ் செயற்படுகின்ற சுதேச மருத்துவ கற்கை நெறிகள் பிரிவு உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சுதேச மருத்துவ கற்கை நெறி நிறுவனங்களையும் உள்ளடக்கி செயற்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்டிருந்தது.

குறித்த சட்டமூலம் தொடர்பாக தன்னுடைய ஆட்சேபனையை அமைச்சரவையில் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுதேச மருத்தவம் என்பது ஒவ்வொரு பிரதேசத்தின் சூழலமைவிற்கு ஏற்ப சில வித்தியாசங்களையும் வெவ்வேறான சிறப்புக்களையும் கொண்டிருப்பதால், அதனை கொழும்பை மையமாகக் கொண்ட கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவது ஆரோக்கியமாக இருக்காது எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இந்தக் கருத்தினை ஏனைய சில அமைச்சர்களும் ஏற்றுக்கொண்ட நிலையில், இதுதொடர்பான சட்ட திருத்த மூலத்தினை கைவிடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

யாழ். பல்கலைக் கழகத்தின் சித்த மருத்தவ கற்கை நெறி பிரிவை, சித்த மருத்துவ கற்கைகள் பீடமாக தரமுயர்த்துவதற்கான முயற்சிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. – 18.10.2022

Related posts:


சீவல் தொழிலாளர்களது நாளாந்த உற்பத்திகளை சந்தைப்படுத்த விஷேட ஏற்பாடு – அமைச்சரவை அனுமதித்துள்ளது என அ...
நாச்சிக்குடா கடற்றொழிலாளர் எதிர்கொள்ளம் பிரச்சினைகள் குறித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
தேசிய வேலைத் திட்டங்கள் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் - ...