நாச்சிக்குடா கடற்றொழிலாளர் எதிர்கொள்ளம் பிரச்சினைகள் குறித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Sunday, January 30th, 2022

 

நாச்சிக்குடா, யாகப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் அழைப்பினை ஏற்று குறித்த கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இந்நிலையில் நாச்சிக்குடா, புனித யாகப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் இறங்கு துறையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவது தொடர்பான இறுதித் தீர்மானம் கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளின் ஆலோசனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அத்துடன் கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கு விண்ணப்பித்திருக்கும் சுமார் 62 பேரின் விண்ணப்பங்களை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தார்

இதேவேளை கிளிநொச்சி, செஞ்சோலையில் வளர்ந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, காணி இல்லாத குடும்பங்களுக்கு, கடந்த காலத்தில் செஞ்சோலை பராமரிப்பு நிலையம் செயற்பட்ட அரச காணியில் காணிகள் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்..

முன்பதாக செஞ்சோலை பராமரிப்பு நிலையத்தில் வளர்ந்தவர்களின் சுமார் 48 குடும்பங்கள் செஞ்சோலை பராமரிப்பு நிலையம் இயங்கிய காணியில் தற்காலிக வீடுகள் அமைத்து வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: