யாழ்ப்பாணத்திற்கான புகையிரத கட்டணத்தில் பாரபட்சம் ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, August 24th, 2018

வடக்கு மாகாணத்தின் பளை இரயில் நிலையத்திற்கும் காங்கேசன்துறை இரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட இரயில் மற்றும் உப இரயில் நிலையங்களுக்கமான இரயில் பயணிகள் கட்டணமானது ஏற்கனவே நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான இரயில் பயணிகள் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் சமச்சீரற்ற வகையில் காணப்படுகின்றது இந்நிலையில் அக்கட்டணமானது மேலும் 15 வீதத்தால் மீள அதிகரிக்கப்பட உள்ளதா? என ஈழ மக்;கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கேள்வி நெரத்தின்போது போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அவர்களிடமே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.ஸ

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

2018ஆம் அண்டு வரவு – செலவுத் திட்டத்திற்கு அமைவாக இரயில் பயணிகள் கட்டணத்தை மறுசீரமைப்பு செய்வது தொடர்பில் திறைசேரியின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் மேற்படி கட்டண மறுசீரமைப்பு தொடர்பில் வர்த்தமானி பிரசுரம் மேற்கொள்வது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதனடிப்படையில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 01ஆம் திகதி முதல் மேற்படி கட்டண மறுசீரமைப்பு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிய வருகின்றது.

இந்த நிலையில் வடக்கு மாகாணத்திலே பளை இரயில் நிலையத்திற்கும் காங்கேசன்துறை இரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட இரயில் நிலையங்கள் மற்றும் உப இரயில் நிலையங்களில் இருந்து நாட்டின் ஏனைய இரயில் மற்றும் உப இரயில் நிலையங்களுக்கும் அதேபோன்று நாட்டின் ஏனைய இரயில் நிலையங்கள் மற்றும் உப இரயில் நிலையங்களில் இருந்து பளை இரயில் நிலையத்திற்கும் காங்கேசன்துறை இரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட இரயில் மற்றும் உப இரயில் நிலையங்களுக்குமான பயணிகள் கட்டணத்தினை நாட்டின் ஏனைய அனைத்து பகுதிகளுக்குமான இரயில் பயணிகள் கட்டணத்திற்கு ஏதுவாக மறுசீரமைப்பு செய்து அதன்பின்னர் மீள நூற்றுக்கு 15 வீதமான கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளப் போவதாக தெரிய வருகின்றது.

இந்த நிலையில் நாட்டின் அனைத்து இரயில் பயணிகள் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளனவா? அதிகரிக்கப்படவுள்ளன எனில் நூற்றுக்கு எத்தனை வீதம் அதிகரிக்கப்படவுள்ளது?

மேற்படி இரயில் பயணிகள் கட்டண அதிகரிப்பினைவிட வடக்கு மாகாணத்தில் பளை இரயில் நிலையத்திற்கும் காங்கேசன்துறை இரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட இரயில் மற்றும் உப இரயில் நிலையங்களில் இருந்து ஏனைய இரயில் மற்றும் உப இரயில் நிலையங்களுக்கும் நாட்டின் ஏனைய இரயில் மற்றும் உப இரயில் நிலையங்களில் இருந்து வடக்கு மாகாணத்தின் பளை இரயில் நிலையத்திற்கும் காங்கேசன்துறை இரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட இரயில் மற்றும் உப இரயில் நிலையங்களுக்கமான இரயில் பயணிகள் கட்டணமானது ஏற்கனவே நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான இரயில் பயணிகள் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் சமச்சீரற்ற வகையில் நூற்றுக்கு சுமார் 15 வீதம் வரையில் அதிகரித்தே காணப்படுகின்ற நிலையில் அக்கட்டணமானது ஏனைய இரயில் பயணிகள் கட்டணங்களுடன் சமச்சீராக்காமல் மேலும் 15 வீதத்தால் மீள அதிகரிக்கப்பட உள்ளதா? இவ்வாறு மேலும் மீள 15 வீதமான கட்டணம் அதிகரிக்கப்படும் எனில் அதற்கான காரணங்கள் என்ன? அத்துடன் ஏற்கனவே அதிகரிக்கப்பட்ட நிலையில் சமச்சீரற்றுக் காணப்படும் மேற்படி பகுதிக்கான இரயில் பயணிகள் கட்டணத்தை இதுவரையில் சீர் செய்யாததற்கு காரணம் என்ன?

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகின்ற காலகட்டத்தில் இத்தகைய மேலதிக கட்டணங்கள் அறிவிடப்பட இருப்பின் இத்தகைய மேலதிக கட்டணங்களை அறவிடப்படாதிருப்பதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க முடியுமா? என கேள்வி எழுப்பியிருந்த செயலாளர் நாயகம் வடக்கு மாகாணத்தில் இரயில் போக்குவரத்துத் துறை சார்ந்து பணியாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகக் கூறப்படுகின்ற நிலையில் அவற்றினை தொழில்வாய்ப்புகள் அற்ற நிலையில் இருந்து வருகின்ற வடக்கு மாகாண ஆளணிகளைக் கொண்டு நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? என்றும்; கோரிக்கைவிடுத்திருந்தமை குறிப்பிடத்தககது.

Related posts: