மக்களுக்காக அரசாங்கம் வகுக்கின்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Thursday, May 10th, 2018

எமது மக்களுக்காக அரசாங்கம் வகுக்கின்ற திட்டங்கள் வெறும் எழுத்து வடிவங்களிலோ, அரச திணைக்கள மட்டங்களிலோ மாத்திரம் இருப்பதால் எவ்விதமான பயனும் இல்லை. அவை, மக்கள் மத்திக்கு கொண்டு செல்லப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். அவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகின்றபோது, அவற்றை மக்கள் உணர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிதுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கொள்கை விளக்க உரை பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

தாம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் பல்வேறு விடயங்களை இந்த உரையின் மூலமாக சுட்டிக்காட்டிருந்தபோதும், அந்தந்த விடயங்கள் மக்கள் மத்தியில் நடைமுறை ரீதியில் செயற்படுத்தப்படுகின்றனவா? என்பது தொடர்பில் அதிகாரிகளோ, அமைச்சர்களோ ஆராய்ந்து பார்க்கின்றார்கள் என்ற நிலை இருக்கின்றதா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

ஆனாலும் பல்வேறு விடயங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் கௌரவ ஜனாதிபதி அவர்களின் உரை சுட்டிக்காட்டுகின்றது.  இந்த அனைத்து விடயங்களையும் முன்னெடுப்பதற்கு இந்த நாட்டின் ஸ்திரத் தன்மை பேணப்பட வேண்டியது அவசியமாகும். அது அரசியல் ரீதியாக இருக்கலாம், சமூக, பொருளாதார ரீதியாக இருக்கலாம்.

அந்த வகையில், ‘நிலையான நாட்டின் அடித்தளம் தேசிய நல்லிணக்கமே’ என்பதை ஏற்றுக் கொள்கின்ற ஜனாதிபதி அவர்கள், ‘தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின், ‘சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்மானங்களை இயற்றத்தக்க கட்டமைப்பினை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்றும், ‘அந்த நோக்கை வெற்றி கொள்வதற்கு தற்போது செயலில் இருந்து வருகின்ற மாகாண சபை முறைமையை மேலும் பலப்படுத்தவது காலத்தின் தேவையாகும்’ என்றும் வலியுறுத்துகின்றார்.

மாகாண சபை முறைமை இந்த நாட்டில் அறிமுகமான காலத்திலிருந்தே இந்த வழிமுறையை நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். அந்த வகையில், எமது நடைமுறை சாத்தியமான நிலைப்பாட்டினை ஏற்றுக் கொள்கின்ற ஜனாதிபதி அவர்களின் யதார்த்தமான நிலைப்பாட்டினை நாம் வரவேற்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும். டக்ளஸ் தேவானந்தா வேண...
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தோல்வி கண்டவர்கள் நாங்கள்- மணியந்தோட்டம் மக்கள் டக்ளஸ் தேவ...
நாடு மீண்டும் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள சில கவனக்குறைவுகளே காரணம் - கட்டுப்படுத்த அரசாங்கம் தீவ...