கொலைகளை நியாயப்படுத்தியவர்களே இன்றைய இதர தமிழ் அரசியல் வாதிகள் – சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, January 10th, 2019

பொலிஸாரினால் வாக்குமூலங்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் கைது செய்யப்பட்டு, பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தக் கைதிகள், பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதையும், பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும் என்பதையும் நான் மீண்டும் இந்தச் சபையிலே கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2002ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழான கட்டளை – ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுவதற்கான சட்டமூலம் தொடர்பாக உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆவர் மேலும் தெரிவிக்கiயில் –

பயங்கரவத தடைச் சட்டம் நீக்கப்பட்டு, சர்வதேச தரத்தினாலான சட்டம் கொண்டு வருப்படும் எனக் கூறப்பட்டது. இதுவரையில் அது பற்றி எந்தப் பேச்சுமே ,ல்லை.

அதே நேரம், கடந்த பத்து வருடங்களில் இடம்பெற்றிருப்பதாக 7183 கொலைகள் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பினும், இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்களது எண்ணிக்கை ,தில் இல்லை.

கடந்த காலங்களில் விடுதலையின் பெயரால் நடந்திருந்த கொலைகளை நியாயப்படுத்தியும், மூடி மறைத்தும், திசை திருப்பியும், பயத்தால் மௌனித்தும் வந்துள்ள சக தமிழ் அரசியல்வாதிகளும் இங்கு நடந்து முடிந்த எமது மக்களின் அனைத்துக் கொலைகளுக்கும் பங்காளிகளாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கொலைகளால் எதனையும் சாதித்துவிட முடியாது என்ற நிலைப்பாட்டில் செயற்படுகின்ற எம்மீதும் கொலைப் பழிகள் சுமத்தப்பட்டிருந்தன. இன்று, அந்தப வீண் பழிகளிலிருந்து காலம் எங்களை விடுவித்து வருகின்றது.

Untitled-3 copy (2)

Related posts:


பொருளாதார மீட்சி என்று கூறி மேலும் இழப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு துணைபோகாதீர்கள் - டக்ளஸ் எம...
தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாடில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சிறப்பு கலந்துரையாட...
பேலியகொடை மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் - கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம்!