அத்துமீறல்கள் குறித்து ஆக்கபூர்வமாகப் பேச வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா !

Saturday, June 24th, 2017

இழுவை மடிகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற கடற்றொழிலைத் தடை செய்வதற்கான சட்டமூலத்தினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் ஏதேனும் தடைகள் உள்ளனவா? உள்ளன எனில், அது குறித்து விளக்கம் தர முடியுமா? இல்லையேல், வடக்குக் கடலில் பாரிய அழிவினை உண்டுபண்ணி வருகின்ற இத்தொழில் முறைமையைத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலளாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (23) கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை தொடர்பான கேள்வி நேரத்தின்போது அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், எமது கடல் வளத்தையும், பெருந்தொகையான கடற்றொழிலாளர்களினது வாழ்வாதாரங்களையும் அழித்து வருகின்ற தடைசெய்யப்பட்ட அனைத்து கடற்றொழில் முறைமைகளையும் முற்றாக நிறுத்துவதற்கும், அதற்கு மாற்றாக வேறு தொழில் முறைமைகளை ஊக்குவிப்பதற்கும், அதற்கான உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியுமா?

மத்திய கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு விடுக்கின்ற தொழில் ஒழுங்கு விதிகள் மற்றும் சட்டங்களை வடக்கிலும் முறையாக செயற்படுத்த வலுவுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமா?

எல்லை தாண்டியதும், தடைசெய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான இந்திய கடற்றொழிலாளர்களது தொழில் அத்துமீறல்கள் குறித்து மெற்கொள்ளப்பட்டு வருகின்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலைப்பாடு என்ன? என்றும் அவர் கெள்வி எழுப்பியுள்ளார்

Related posts:

"அபிவிருத்திக்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல” - எனினும் மக்களின் ஏகோபித்த இணக்கம் இன்றி எடுக்கப...
இந்தியாவூடாக கிடைக்கும் ஆரோக்கியமான விடயங்களை மக்களுக்கானதாக்கிக் கொள்வது அவசியம் - அமைச்சர் டக்ளஸ் ...
யாழ் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ் மறை மாவட்ட பேராயருடன் மரியாதை நிமிர்த்தம் சந்திப...