மயானங்களை துப்புரவு செய்யும் போலித் தேசியவாதிகள் எமது மக்களின் துயரங்களை துப்புரவு செய்வதற்குத் தயாராக இல்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, November 21st, 2020

சுயலாப இருப்புக்கும் அதற்கு முதலிடுகின்ற அரசியலுக்கும் தங்களால் காவு கொடுக்கப்பட்ட எமது உறவுகளின் அப்பாவி உறவினர்களது கல்லறைகளுக்கு மட்டும் வருடத்தில் ஒரு நாள் கட்டைப் பஞ்சாயத்து உரிமை கொண்டாடும் போட்டியில் ஊடகங்களில் முதலிடம் பிடிக்கின்ற ஊதாரி அரசியலை இன்னும் தொடருகின்ற வெற்று வாய்ப்பேச்சு போலி தமிழ்த் தேசியமும், அதனை கிண்டலடித்து ஊதித் தள்ளுகின்ற அதி தீவிர போலித் தமிழ்த் தேசியமும். உயிருடன் இருக்கின்ற எமது மக்களை கல்லறைகளாக்கி, கல்லறை அரசியலையே சில்லறையாகவும் மொத்தமாகவும் மேற்கொண்டு வருகின்றனர்.

மயானங்களை துப்புரவு செய்கின்ற இவர்கள், எமது மக்களின் துயரங்களை துப்புரவு செய்வதற்குத்; தயாராக இல்லை. வாழ வேண்டிய எமது மக்களை கல்லறைகளாக்கிவிட்டு, வாழுகின்ற எமது மக்களுக்கு துரோகிகளாகிவிட்ட இவர்களின் வரலாறுகளை எந்தக் கல்லறைகளும் ஏற்றுக் கொள்ளாது என்றே தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இருக்கின்ற வளங்களைக் கொண்டு எமது மக்கள் வாழ்க்ககையில் முன்னேற வேண்டும் என நாங்கள் உழைக்கின்ற நிலையில், எமது மக்களின் அவலங்களை தொடரவைத்து அதன் மூலமாக இவர்கள் தங்களது வாழ்க்கையை முன்னேற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

போலி தமிழ்த் தேசியத்தின் நல்லாட்சியில் நன்றாகவே தங்களுக்காக உழைத்தவர்கள், எமது மக்களின் சொந்த காணி, நிலங்களின் விடுவிப்பிற்கு, காணாமற்போனோருக்கான பரிகாரங்களுக்கு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பிற்கு, அபிவிருத்திக்கு, வேலைவாய்ப்பு பிரச்சனைக்கு, அரசியல் தீர்வுக்கு நேர்மையாக உழைக்காமல், இன்று நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அரசியல் தீர்வினை முதலீடாக்க வேண்டும் என்கின்றனர். இத்தகைய ஆபூர்வமான சிந்தனைகள் அழிவின் விழிம்பில்தான் வரும் என்கிறார்கள் பொருளதார நிபுணர்கள்.

அதேநேரம், கதிரைக்காக காத்திருந்த குதிரை, அன்று யுத்தம் நடைபெற்றிருந்தபோது, இதே நாடாளுமன்ற சபையில் 40 ஆயிரம் சவப்பெட்டிகளை தயாரிக்குமாறு தமது சுயலாப அரசியலுக்காக வேண்டி தென்லிங்கைக்கு சவடால் விட்டுவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பியோடி, அங்கே தனது குடும்பத்துடன் சுகபோக வாழ்க்கையை வாழந்துவிட்டு, தனது காட்டிக்கொடுப்பு இராஜதந்திரத்தை பயன்படுத்தி, மீண்டும் இங்கு வந்து, தனது பாகனுடன் சேர்ந்து  கனைக்க ஆரம்பித்துள்ளது. கல்லறையிலிருந்து கனைக்கின்ற இது எத்தனை ஆயிரம் சவப் பெட்டிகளை மீண்டும் கல்லறைகளுக்கு இட்டுச் செல்லுமோ? தெரியாது என்றே தமிழ் சமூக ஆர்வலர்கள் கதைத்துக் கொள்கின்றனர். இதனது மௌனமும், கனைப்பும் எமது மக்களைக் காட்டிக் கொடுப்பதன் அறிகுறி என தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

எமது மக்களும் அனைத்து உரிமைகளும் பெற்றவர்களாக வாழ வேண்டும். அதற்கான அனைத்து தேவைகளையும் கௌரவமாக எமது மக்கள் பெற வேண்டும். அதற்காகவே நாம் உழைக்கின்றோம். அந்த வகையில் இந்த வரவு – செலவுத் திட்டத்தை வரவேகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

விவசாயத் துறையில் எதிர்பார்க்கப்பட்ட  இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் ...
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே சந்திப்பு!
மில்டன் மோட்டர்ஸ் முச்சக்கர வண்டி தொழிற்சாலைக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ரமேஸ் பத்திரன...