மில்டன் மோட்டர்ஸ் முச்சக்கர வண்டி தொழிற்சாலைக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ரமேஸ் பத்திரன விஜயம் – நிலைமைகள் தெர்ர்பிலும் ஆராய்வு!

Monday, December 12th, 2022

பண்டாரகம பகுதியில் தனியார் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள மில்டன் மோட்டர்ஸ் எனப்படும் மின்கலத்தில் இயங்கும் முச்சக்கர வண்டி தொழிற்சாலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரன ஆகியோர் பார்வையிட்டனர்.

குறித்த தொழில் முயற்சியாளர்களினாலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய மின்கலத்தில் இயங்குகின்ற படகு இயந்திரங்களை வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

பேலியாகொட மத்திய மீன் சந்தைக்கான கண்காணிப்பு விஜயமொன்றை நேற்றையதினம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சந்தையின் செயற்பாடுகளை ஆராய்ந்ததுடன், அடையாளப்படுத்தப்பட்ட குறைபாடுகளை தீர்ப்பது தொடர்பாகவும் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் ஆராய்ந்தார்.

குறிப்பாக வாகனத் தரிப்பிடங்களை ஒழுங்குபடுத்துதல், கழிவுப் பொருட்களை உரிய முறையில் அகற்றி சுகாதார நிலையை உறுதிப்படுத்தல் மற்றும் நிர்வாக குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையின் அலங்கார மீன்வளர்ப்பு தகவல் மையத்திதை ஆரம்பித்து வைத்தார்...
ஆரோக்கியமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டம் மக்கள் மத்தியில் பார...
வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் - ஜனவரி முதல் வாரத்தில் ஜனாதிபதியின் வடக்கிற்க...