கடற்றொழில் அமைச்சின் செயற்திட்டங்கள் மக்களை நோக்கியதாக முழுமையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, November 27th, 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களது ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் கொள்கை வழி அடிப்படையில் எமது கடற்றொழில் அமைச்சினது செயற்திட்டங்களை நாம் முழுமையாக முன்னெடுத்து வரும் காலகட்டத்தில், உலகமயத் தொற்று அனர்த்தமான கொவிட் 19 கொரோனா தொற்றின் இரண்டாம் அலை எமது நாட்டு மக்களையும் பாதித்து வருகின்ற நிலையில், இத் தொற்று குறிப்பாக எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் குறித்தும் பாரியதொரு வீழ்ச்சி நிலையை ஏற்படுத்திவிட்டது.

குறிப்பாக, பேலியகொட மத்திய மீன் விற்பனைக் கட்டிடத் தொகுதியில் கொவிட் 19 கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, படிப்படியாக மக்கள் மத்திக்கு சென்றடைந்த தகவல்கள் போஷாக்கான மீன் உணவின் மீதான சந்தேகத்தை அம் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதாக அமைந்து விட்டமை துரதிஸ்டவசமாகும். அதேநேரம், மீன் தொடர்பிலான மக்களின் வீண் சந்தேகத்தை அகற்றும் வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி அவர்கள் மேற்கொண்டிருந்த துணிந்த முயற்சி பாராட்டுக்குரியது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

வருடத்தில் செப்ரெம்பர் மாதம் முதற்கொண்டு நவம்பர் இறுதி வரையிலான காலகட்டமானது, மிக அதிகளவிலான கடலுணவு அறுவடைக்குரிய காலகட்டம் என்பதால், அறுவடை செய்யப்படுகின்ற கடலுணவு உற்பத்திகளை போதிய அளவில் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கென எமது கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அவர்கள் முதற்கட்டமாக இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்;கு ஒதுக்கியிருந்த 200 மில்லியன் ரூபா நிதியைக் கொண்டு, இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை ஈடுபடுத்தி, எம்மால் குளிரூட்டி களஞ்சியப்படுத்தக்கூடிய கொள்ளவுக்கு ஏற்ப கடலுணவு உற்பத்திகளை நாம் கொள்வனவு செய்து வருகின்றோம். அதேநேரம், பழுதடைந்த குளிரூட்டிகளை திறுத்துகின்ற அதேவேலை எதிர்காலத்திற்கு தேவையான குளிரூட்டிகளை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியிலும் ஈடுபடுகின்றோம்

இவ்வாறு களஞ்சியப்படுத்தப்பட்டு வரும் கடலுணவு அறுவடைகளை எதிர்காலத்தில் வரக்கூடிய திருநாட் காலங்களிலும், அடுத்து வரக்கூடிய கடலுணவு அறுவடைகள் வெகுவாக குறைந்த காலங்களிலும் பொதுமக்களுக்கு தட்டுப்பாடுகளின்றி விநியோகஞ் செய்யக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

அதேநேரம், கருவாடு உற்பத்திக்கெனவும் குறிப்பிட்டளவு தொகை மீன்கள் கருவாட்டு உற்பத்தியாளர்களால் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளுக்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், எமது நாட்டு கருவாடு, மாசி மற்றும் ரின் மீன் உற்பத்திகளை தரம் கூடிய வகையில் தயாரிப்பதற்கான வழிகாட்டல்களை முன்னெடுத்துவரும் அதேவேளை, கருவாடு தயாரிப்பதற்கென உலர்த்தும் இயந்திரங்களை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

Related posts:

தமிழ் தலைவர்கள் விட்ட தவறுகளே எமது மக்களது இன்றைய நிலைமைகளுக்கு காரணம் - டக்ளஸ் தேவானந்தா!
வடக்கில் மின் பாவனையாளர்களுக்கான மின் கட்டணச் சிட்டைகளை மாதாந்தம் விநியோகிப்பதில் தாமதம் ஏற்படக் கார...
ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கான விலையில் திடீர் வீழ்ச்சி - பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உர...

துறைமுகம் அமைக்கப்பட்டால் மக்களின் வாழ்வியல் பறிபோகும் - டக்ளஸ் தேவானந்தாவிடம் கடற்றொழிலாளர்கள் சுட்...
நற்பண்புகள் சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டப்படவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
எதிர்வரும் 17 ஆம் திகதி மயிலிட்டி மீ்ன் பிடித் துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் புனரமைப்பு பணிகள் முன்ன...