கடந்த காலத்தில் அநாவசிய தர்க்கங்களால் அரசியல் தீர்வுக்கான நல்ல வாய்ப்புக்களை தவறவிட்டுவிட்டோம்

Friday, July 21st, 2017

இன்றைய நிலையில் இவ்விடயங்களில் சம்மந்தப்பட்டவர்கள் வார்த்தை ஜாலங்களில் தமது பாண்டித்தியங்களைக் காட்டும் தருணம் இதுவல்ல.அதேபோல் சொற் தொடர்களின் மேல் தர்க்கம் புரியும் நேரமும் இதுவல்ல. இச்செயற்பாடுகள் எம்மை முன்னேற்றங்களை நோக்கி கொண்டு செல்லப்போவதில்லை.

உள்ளடக்கம் எது என்பதைப் பார்க்கவேண்டுமே தவிர, உறையின் மேல் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்று பார்ப்பதில் அர்த்தமில்லை.கடந்த காலத்திலும், அரசியல் தீர்வு காண்பதற்கு கிடைக்கப்பெற்ற நல்ல வாய்ப்புக்களை மேற்கூறியவாறான அநாவசியமான தர்க்கங்களில் ஈடுபட்டு கோட்டைவிட்டோம். என்பதே எமது வரலாறாகும்.

இன்று நாம் முன்வைக்கும் ஆலோசனைகள் யதார்த்தபூர்வமானதாகவும், நடைமுறைப்படுத்தப்படக் கூடியதாகவும் இருக்கவேண்டும். ஆகவேதான் நாம் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பிப்பதே யதார்த்தமானது என்று கூறிவருகின்றோம்.

இம்முறைமையானது எமது அரசியலமைப்பில் உள்ளடக்;கப்பட்டிருப்பதுடன், வடக்கு கிழக்கு மக்கள் மட்டுமன்;றி தென் இலங்கை மக்களும் இதன் பயன்களை அனுபவித்து வருகின்றனர்.தவிரவும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதோ, சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்வதோ அவசியமில்லை.

இம்முறையில் சில குறைபாடுகள் இருக்கின்றபோதும் அதை முழுமையாக அமுல்படுத்தும்போது பெறப்படும் அனுபவங்களும். இந்நடைமுறையின்போது இனங்கிளுக்கிடையே ஏற்படும் பரஸ்பர நம்பிக்கைகளும் இம்முறைமையை மேலும் செழுமைப்படுத்துவதுடன் இந்நாட்டை மேலும் முன்னோக்கி நகர்த்துவதற்கும் பலமாக அமையும்.

Daily Mirror பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியின் போது தமிழர் தரப்பில் 5 தசாப்தங்களாக சமஷ்டி அரசியலமைப்பிற்கான கோஷம் இருந்துவந்தபோதும் அது ஒருபோதும் நடைமுறைக்கு வரவில்லை. இலங்கையில் சமஷ்டி ஆட்சி முறைமையை ஏற்படுத்தும் சாத்தியங்கள் தொடர்பாக என்ன நினைக்கின்றீர்கள்?என  டக்ளஸ் தேவானந்தாவிடம் வினவியபோதே   அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

வலி.வடக்கின் வாழ்வாதார அபிவிருத்தி தொடர்பில கூடுதல் அவதானம் செலுத்தப்படும் - டக்ளஸ் எம்.பி தெரிவிப்ப...
அக்கராயனில் கரும்புச் செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்த...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் - பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 22 இலட்சத்து 55 ஆயிரத்து ...