மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Wednesday, January 25th, 2023


கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பாவனையை மட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய உருவாக்கப்பட்டுள்ள மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை கடற்றொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.

‘மில்டன் மோட்டர்ஸ்’ எனும் பெயரில்  தனியார் தொழில் முயற்சியாளர் ஒருவரினால் வடிவமைக்கப்பட்டுள்ள, குறித்த மின்கல படகு இயந்திரங்களின் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், அதனை சந்தைப்படுத்துவதற்கான அனுமதிகள் மற்றும் விலை நிர்ணயங்கள் தொடர்பாக, குறித்த தொழில் முயற்சியாளருடன் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடினார்.

இதன்போது, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த ஆகியோர் கலந்து கொண்டனர். – 25.01.2023

Related posts:

நீங்கள் எமக்களிக்கும் வாக்குகள் ஒவ்வொன்றும் உங்கள் எதிர்காலத்தை நிச்சயம் ஒளிமயமாக்கும் - வவுனியாவில்...
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சட்டவிரோதமானவை – டக்ளஸ் எம்.பி. குற்றச்சாட்ட...
வீட்டுத் திட்டத்தை பூர்’த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் : டக்ளஸ் எம்பியிடம் புன்னாலைக்கட்...

20ஆவது திருத்தச் புதியதொரு அரசிலமைப்பு அல்ல : ஒரு திருத்தச் சட்டமே – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் த...
அதிகார துஸ்பிரயோகத்தை கண்டித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு யாழ் மாவட்ட அரச அதிகாரிகள் வாழ்த்து!
செயலூக்க வல்லமை சிவஞானசோதியின் மறைவு பெருந்துயரை தந்துவிட்ட பேரிழப்பு - அனுதாபச் செய்தியில் அமைச்சர்...